Wednesday, October 31, 2018

முதலில் சங்கங்களை சட்டம் ஒழித்தால் தான் நாடு உருப்படும்.

SBI வங்கியின் சேவை மிக மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. அங்கே வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய சொந்த பணத்தை பிச்சை போடுவது போல் செயல்படுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் மாதம்தோறும் பிடிக்க வேண்டிய தொகையை ஒருமுறைக்கு, இரண்டுமூன்று முறை பிடித்தம் செய்து, அதனால் ஏற்படும் இழப்புக்களையும் வாடிக்கையாளர்களிடமே வசூலிப்பது அடாவடித்தனம். அதுவும் மாசக்கடைசியில் அவர்கள் செய்யும் தவற்றால் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது பிச்சை எடுப்பதற்குச் சமம். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு கோபமும் ஆத்திரமும் வேறு வருகிறது. ஆன்லைன் பேங்க்கின் மூலம் அவர்களுடைய வேலை 75% குறைந்திருந்தும் கூட சரியான நேரத்தில் வேலைகளை ஆரம்பிக்கவோ, சரியான வகையில் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லவோ, செய்யாமல் வாடிக்கையாளர்களை அது யாராக இருந்தாலும் மரியாதையே இல்லாமல் பேசுவதும், தன்னை மாற்றிக் கொள்ளாமல் வாடிக்கையாளர்களிடம் கத்துவதும், வேலை செய்யும் போது செல்போனில் பேசிக்கொண்டிருப்பதும், அவர்களுக்குள்ளகவே பேசிக்கொள்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதனால் வாடிக்கையாளர்களின் நேரமும் வீணாகிறது. ஏ டி எம் எங்கே போனால் வேலைசெய்யவில்லை என்ற போர்ட் தொங்க விடப்பட்டிருக்கும். வங்கியில் வேலை செய்பவர்களின் கர்வமும் திமிரும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒருசிலர் தானே, இவ்வாறு தவறு செய்கிறார்கள் என்று சிலர் கேட்பார்கள், அந்த ஒருசிலர் தான் மக்களின் நேரடி சேவைகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வைத்து தான் வங்கியின் சேவையை பொதுமக்கள் தீர்மானிப்பார்கள். சிடுமூஞ்சிகளையும், வேலையின் தன்மையை அறியாதவர்களையும், திமிர்பிடித்தவர்களையும் மக்களின் நேரடிசேவையில் பணியாற்ற விடாமல் வேறு ஏதாவது பணிகளைக் கொடுத்தால் வங்கியின் பெயர் கெடாமல் இருக்கும். வங்கிகளில் உண்மையாக வேலை செய்பவர்களையும் இது பாதிக்கிறது என்பதை வங்கிகள் தான் உணரவேண்டும். இதில் பொதுமக்களை குறை சொல்ல வங்கிக்கோ, வங்கி ஊழியர்களுக்கோ கொஞ்சம் கூட உரிமை இல்லை. புரிந்து நடந்து கொள்வார்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...