Wednesday, October 31, 2018

காக்கை பாடினியம் போன்றவற்றில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நாம் அனைவரும் வட்டத்தின் சுற்றளவை கணிப்பதற்கு 2πr அல்லது πd எனும் சூத்திரங்களை பாவிக்கின்றோம். இது தமிழரின் கண்டுபிடிப்பு என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா??? கீழே பாருங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
வட்டத்தின் சுற்றளவை கணிப்பதற்கு கணக்கதிகாரம், காக்கை பாடினியம் போன்றவற்றில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
காக்கை பாடினியம்
****************************
"விட்டமோர் ஏழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்
திகைப்பன சுற்றுத்தானே"
நிறுவல் :-
(பரிதி - ப, விட்டம் - வி, ஆரை - ஆ என வைத்தால்)
= (விட்டமோர் ஏழு செய்து) = வி/7
= (திகைவர நான்கு சேர்த்து) = வி+4வி/7
= (சட்டென இரட்டி செயின்) = 2[வி + 4வி/7]
(திகைப்பன சுற்றுத்தானே)
= 2[வி + 4வி/7
= 2[11வி/7]
= 2x11வி/7
= 22/7 x வி
தற்காலத்தின் படி 22/7 = π எனவும் வி=d (விட்டம்) எனவும் கொண்டால்...
வட்டத்தின் சுற்றளவு = 22/7 x வி
= πd
(d = 2r ஆக) சுற்றளவு = 2πr
ஆக இன்று வட்டத்தின் சுற்றளவு காண பயன்படுத்தப்படும் சூத்திரங்களை தமிழன் π பயன்படுத்தாமலே கணித்துள்ளான் என்பது தமிழருக்கு பெருமையே.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...