Sunday, October 21, 2018

ஆனா அதுக்கு அவங்களுக்கு சொரணை யிருக்கணும்.

ஸ்டாலினின் சர்க்கஸ் உதாரணம் டிவிக்களின் நேற்றைய பேசு பொருள்
இது பேரறிஞர் அண்ணா பயன்படுத்திய உவமை
தம்பிக்கு கடிதம் 1956
தலைப்பு - ஆவடியும் காவடியும்
1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள், சென்னை மாநகருக்கு ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆவடியில் காங்கிரஸ் மாநாடு
அது பற்றிய அண்ணாவின் கடித வரிகளின் சுருக்கம்
தம்பி ! ஆவடியில் நடைபெற்ற
காங்கிரசின் அலங்காரத்தைக் கண்டதாலே சொக்கிப் போனேன்!
ஏ! அப்பா அப்படிப்பட்ட ஒரு மகாநாட்டை இதுவரை யாரும் கண்டிருக்கமுடியாது.
லலிதா பத்மினியின் நாட்டிய நாடகமென்ன, வேறு பல கலா நிகழ்ச்சிகள் என்ன-நேர்த்தியான காட்சிகள்,
மிக நேர்த்தியான காட்சிகள்!
அங்கு நேரு
பண்டிதரைப் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல "தலைவர்கள்'' மொய்த்துக்
கொண்டிருந்தனர்.
ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்துவிட்டால் போதும், அந்த ஊரில் உள்ள
வாலிபவர்களுக்கு, உடலிலே "காயம்'' ஏற்பட்டே விடும் -
உயரத் தாண்டுதல்,
தாவிக் குதித்தல், சைகிள் சவாரியில் வேலை காட்டுவது, இப்படிச் சர்க்கஸ்செய்வதால்!
நேரு பண்டிதருடைய பிரத்யேகத் திறமையே, இத்தகைய "சொக்க வைக்கும்''
காரியத்தைச் சோர்வில்லாமல் செய்வது தான்!
இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது
Circus என்ற ஆங்கில ஆவணசீரியல் 3ஆவது சீசன் வெளிவந்து விட்டது.
டிரம்பின் அரசியல் பற்றிய கிண்டல் சீரியல்
அரசியலே ஒரு வகையில் சர்க்கஸ் தானே...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...