Friday, October 19, 2018

முன்னோர்கள் பின்பற்றிய சில நன்மை தரும் ஆன்மிக பழக்கங்கள்....!

அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் போன்றவை முன்னோர்களின் காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.
முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய அர்த்தங்கள் இருக்கின்றது. இது போன்று பல ஆரோக்கிய பழக்கங்களை முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் தோப்புக்கரணம் போடும் பழக்கம். காதுகளில் உள்ள 200 நரம்புகளில் சீராக இரத்த ஓட்டம் ஏற்படுவதற்கும் புதிய இரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் பெரிதும் உதவுகிறது. எனவே தான் சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்ப படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். அப்படி செய்தால், அன்றைய நாளில் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்குமாம். காலையில் எழுந்தவுடன் முதலில் உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். அது தெய்வப் பெயர்களாகக் கூட உச்சரிக்கலாம்.
காலையில் எழுந்து முதலில் உள்ளங்கையைப் பார்த்த பின் பூமியைத் தொட்டு வணங்கி, அதன் பின் காலைக் கடன்களைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் செயல்படும் என்று கூறுகின்றார்கள்.
Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...