Wednesday, October 17, 2018

உடல்நலமில்லை என்றவுடன் பதவியைத் துறந்த நம்ம முதல்வர் யார் தெரியுமா????

சுப்பராயுலு ரெட்டியார் 1855 ஆம் வருடம் அக்டோபர் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடுமாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு. செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில்இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பு படித்தார்.
ஜனநாயக நாடு என்றுசொல்லிக்கொள்கிறோம் ஆனால் பல விதங்களில் அரசாட்சி போலத்தானே நடந்துகொண்டிருக்கிறது? குறிப்பாக, தான் உயிரோடு இருக்கும்வரை, பதவியில் இருப்பதையே அரசியல்வாதிகள் விரும்புவர்.
படத்தில் இருப்பவரை பாருங்கள். இவரது பெயர், அகரம் சுப்பராயலு ரெட்டியார். ஆங்கிலேய ஆட்சியில், மாண்டேகு சீர்திருத்த சட்டம் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அதன்படி, 1920- ல் பிரிட்டிஷ் + இந்தியா இரட்டை நிர்வாக ஆட்சிக்கான- சென்னை மாகாண தேர்தலில் ஜெயித்த நீதிக்கட்சியின் முதல் முதல்வர், இவர்.
தியாகராய செட்டியார்தான், முதல்வர் பதவிக்கு ஆங்கிலேயரால் அழைக்கப்பட்டார் .அவர் அதை மறுத்து தனது கல்லூரி தோழரான இவரைப் பரிந்துரைத்தார் .

பதவி ஏற்ற சில மாதங்களிலேயே சுப்பராயலு ரெட்டியார் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக பதவியை ராஜினாமா செய்தார் .
“முதல்வர் பதவி என்பது கடுமையாக உழைக்க வேண்டிய மக்கள் பணி. உடல் நலம் நன்றாக இருந்தால்தான் சிறப்பாக பணிபுரியமுடியும் ஆகவே பதவி விலகுகிறேன்” என்றார் இவர்.
ஹூம்… எப்படி இருந்த முதல்வர் பதவி!?
சென்னை மாகணத்தின் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் ஆவார். நமக்கு தற்போதைய மற்றும் கடந்த சில முதலமைச்சர்களை தெரியும். ஆனால் சுமார் 96 ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சராக இருந்தவர் யார்? என மாணவர்களிடம் கேட்டபோது பெரும்பாலானவர்களுக்கு சரியான பதில் தெரியவில்லை. அரசியலை நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே சென்னை மாகாணத்தின் முதலாவது முதலைமைச்சரின் பெயர் தெரிந்துள்ளது.
இவரை திவான் பகதூர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் என அழைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி இவருக்கு திவான் பகதூர் பட்டத்தை வழங்கியுள்ளது. சென்னை மாகாணத்தில் நடந்த முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
பிறப்பு
சுப்பராயலு ரெட்டியார் 1855 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் செல்வ செழிப்பு மிக்க விவசாய குடும்பம். பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தமான நிலச்சுவான்தார். இவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும். இவர் சென்னை மாநில கல்லூரியில் பட்டபடிப்பை முடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். வழக்கறிஞராகவும் சிறிது காலம் பணிபுரிந்தார்.
அரசியல்
சுப்பராயலு ரெட்டியார் சுதந்திர போராட்டத்தின் மீது ஆர்வம் கொண்டு முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து 1916 ஆம் ஆண்டில் வெளியேறினார். பின்னர் நீதிக்கட்சியில் சேர்ந்தார்.
சுப்பராயலு ரெட்டியார் 1912 ஆம் ஆண்டில் கடலூர் தாலுக்கா வாரியத்தின் தலைவராக பதவி வகித்தார். பின்னர் 1917 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராக பதவி ஏற்றார்.
தியாகராய ரெட்டி, டி.எம்.நாயர் ஆகியோர் தொடங்கிய நீதிக்கட்சியில் சுப்புராயலு ரெட்டியார் தீவிரமாக பணியாற்றினார். நீதிக்கப்சியில் சார்பாக வகுப்புவாரி இட ஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கான பேச்சுவார்த்தை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவுடன் நடைப்பெற்றது. அந்த பேச்சுவார்த்தை குழுவில் சுப்புராயலு ரெட்டியாரும் இடம் பெற்றிருந்தார்.
ஆட்சிமுறை
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இரட்டை ஆட்சிமுறை சட்டம் 1919 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. 1919 ஆம் ஆண்டில் மொன்டேகு – கேம்ஸ் ஃபோர்டடு சட்டசீர்திருத்தங்களின் விளைவாக இரட்டை ஆட்சிமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும் இரட்டை ஆட்சிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் நிர்வாகத்தை இரண்டாக பிரித்தனர். முக்கியமான பொறுப்புகள் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் இருந்தன. அதாவது சட்டம், நிதி, உள்துறை ஆகிய முக்கியமான துறைகள் பிரிட்டிஷ் ஆளுநரின் நிர்வாக குழுவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன. அதே சமயத்தில் கல்வி சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசவையின் கீழ் செயல்பட்டன.
முதல்வர்
இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டன. சென்னை மாகாணத்திற்கு என்று சட்டசபை உருவாக்கப்பட்டது. 134 உறுப்பிணர்களை கொண்டதாக சென்னை மாகாண சட்டசபை உருவாக்கப்பட்டது. மொத்தம் உள்ள 134 உறுப்பிணர்களில் 98 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதியுள்ள உறுப்பினர்களை பிரிட்டிஷ் அரசு நியமிக்கும் நியமன உறுப்பினர்கள் ஆவர்.
சென்னை மாகாண சட்டசபைக்கான முதல் தேர்தல் 1920 ஆம் ஆண்டில் நவம்பர் 20 ல் நடந்தது. காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தது. ஆகவே இந்திய தேசிய காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை. அப்போது நடைப்பெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெருவாரியான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இக்கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. இத்துடன் 18 நியமன உறுப்பினர்களும் இக்கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இக்கட்சியின் பலம் 81 உறுப்பினர்களாக உயர்ந்தது.
நீதிக்கட்சி பெரும்பாலான இடங்களை பிடித்ததன் காரணமாக ஆளுநர் வில்லிங்கடன், நீதிக்கட்சியின் தலைவரான தியாகராய ரெட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார். தியாகராய ரெட்டி தனக்கு பதிலாக சுப்புராயலு ரெட்டியாரை முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்தார். தியாகராய ரெட்டியாரின் கல்லூரி நன்பர்தான் சுப்புராயலு ரெட்டியார்.
சுப்பராயலு ரெட்டியார் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். கல்வி, சுங்கம், பொதுப்பணிகள் ஆகிய மூன்று இலாகாவை சுப்புராயலு ரெட்டியார் கவனித்துக்கொண்டார். பனகல் அரசர் மற்றம் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய இரண்டு பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். உள்ளாட்சி துறை பனகள் அரசருக்கும், வளர்ச்சி துறை வெங்கட ரெட்டி நாயுடுவிற்கும் வழங்கப்பட்டது.
சுப்புராயலு ரெட்டியாருக்கு முதலமைச்சர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் தனது முதல்வர் பதவியை 1921 ஆம் ஆண்டு ஜூலை 11ல் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக பனகல் அரசர் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுப்பராயலு ரெட்டியார் ஏழு மாதகாலமே முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தனது 66 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...