Sunday, October 21, 2018

எல்லாம் தொியும் என்கிற மமதையாக கூட இருக்கலாம்....

எனக்கு சிவகுமாரை எப்போதுமே பிடிக்காது. அவரது ஸ்டார் வால்யூவை சரியாக கணித்தவர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்தான். ‘
இந்தப் பயலை நம்பிப் படமெடுத்தா போண்டியாக வேண்டியதுதான்,’ என்று தேவர் சிவகுமாருடன் ஒரு பாம்பையோ ஆட்டையோ போட்டுத்தான் படம் எடுப்பார். அப்புறம், ‘சொர்க்கம் நரகம்’ என்று ஒரு படத்தில் மிருகங்களே இல்லாமல் படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டார். ஆனாலும் அவரும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார் என்பதில் எவ்வித ஆச்சரியமும் எனக்கில்லை. எம்.ஜி.ஆர்-சிவாஜி, ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் ஆகியோரின் பாணிகளுக்கு வெளியே தமிழ் சினிமாவுக்கு ஒரு ரொமாண்டிக் ஹீரோ அவசியப்பட்டது. சிவகுமாரைப் பிடித்துக் கொண்டார்கள். அதற்கும் கமல் வந்து ஆப்பு வைத்தார்.
ரொமான்ஸ் காட்சிகளில் அவரது எக்ஸ்பிரஷன்களைப் பார்த்து அவருக்குக் காதலா அல்லது மலச்சிக்கலா என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு ஏற்பட்டதுண்டு. (சந்தேகமிருந்தால் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படத்தில் வருகிற ‘தேவியின் திருமுகம்’ பாடலைச் சிரிக்காமல் பார்க்கவும்).
திடீரென்று சிவகுமாருக்கு மைக் மீது மலச்சிக்கல், அதாவது காதல் வந்தது. சினிமாக்காரன் என்ன உளறினாலும் விசிலடித்துக் கேட்க ஒரு கூட்டம் இருக்கிறபடியால், அவரது பேத்தல்கள் பேதியைவிட மோசமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு. இப்படித்தான் ஒரு தடவை ஒரு ஸாஃப்ட்வேர் நிறுவனத்தின் டாய்லெட்டில் இரண்டு டன் ஆணுறைகள் கிடைத்ததாக அளந்து விட்டார். அப்போதே அதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, ஒரு ஆணுறையின் சராசரி எடையென்ன, ஒரு டன்னில் எவ்வளவு தேறும் என்றெல்லாம் நிறைய பேர் தோராயமாகக் கணக்கெல்லாம் போட்டு பதிவுகள் எழுதினார்கள். அதில் ஒருவர் சரி, கோடம்பாக்கம் ஸ்டூடியோ டாய்லெட்டுகளில் எவ்வளவு டன் ஆணுறைகள் தேறும் என்றுகூட கேள்வி எழுப்பினார். எந்த சினிமாக்காரன் இதற்கெல்லாம் பதில் சொல்லுவான்?
சிவகுமாருக்கு வயதாகி விட்டது. அவருக்கும் அவர் போன்ற மரமண்டைகளுக்கும் புரியாத, சபரிமலை போன்ற விஷயங்கள் குறித்து, தேவையில்லாமல் கருத்துக்களைச் சொல்லி, எதையாவது கிளற வேண்டாம். அதை விட்டுவிட்டு, யாராவது விழாவுக்கு அழைத்தால் அங்கே போய் ‘கந்தன் கருணை’ வசனத்தை ஒப்பித்துவிட்டு கைதட்டல் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய் மல்ட்டிவிட்டமின் விழுங்கித் தூங்குவதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...