Wednesday, October 24, 2018

தீபாவளி ஸ்நானத்திற்கு தடை !!

ஹிந்துக்கள் தீபாவளி அன்று குளிக்கக் கூடாது என்று பாப்கான் என்பவர் தொடர்ந்த வழக்கை மிக மிக அவசர வழக்காக இரவோடு இரவாக விடிய விடிய விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதற்கு தடை விதித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
இது பற்றி தீர்ப்பில், ஹிந்துக்கள் பண்டிகை என்பதால் தைரியமாக தடை விதிப்பதாகவும், இதன் மூலம் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி கருத்து கூறிய ராகுல், கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்பது மதவாதம் என்றும் தேம்ஸ் ஸ்நானம் ஆச்சா என்றோ நைல் ஸ்நானம் ஆச்சா என்றோ கேட்பது ஸெக்யுலர் என்றும் தெரிவித்தார்.
ஸ்டாலின் இது பற்றி கூறுகையில், தீபாவளி பண்டிகை என்று சொல்லி குளிப்பதை மட்டுமே தங்கள் கட்சி எதிர்ப்பதாகவும், விடுமுறை தினக் குளியல் என்று சொல்வதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து கமல் டுவீட் செய்துள்ளார்.
எண்ணெய் தேய்த்தால் பிசுபிசு
என்னை தேய்த்தால் கிசுகிசு
உண்மை உரைத்தால் பட்டாசு
உடனே உறைத்தால் விட்டாச்சு
இதற்கு ஸ்ரீபிரியா விடுத்துள்ள சவாலில், இதற்கு யாராவது விளக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
நிருபர்களிடம் இது குறித்து ரஜினி, இஷ்டப்பட்டவங்க குளிக்கட்டும், இஷ்டம் இல்லாதவங்க ஒளியட்டும். தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அன்னிக்கி காலம் காலமா குளிக்கறவங்க பத்தியும் கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சு பாக்கணும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...