Sunday, October 21, 2018

கட்சிஅறிவிப்புஇப்போதுஇல்லைஏன்?

இங்கே அரசியல் செய்ய பணம் ஒரு மிக முக்கியமான விஷயம். கட்சி தொடங்கிய ஆரம்ப காலங்களில் கையிலிருந்து காசு செலவு செய்து, அரசியல் களத்தில், மக்கள் மனங்களில் ஓரளவு இடம் பெற்று விட்ட பின், இங்கு என் கட்சிக்கு இவ்வளவு தான் வாக்கு பலம் என்பது நிரூபணமான பின்னர்அதை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல் நடக்கிறது.
அதன் பின் கட்சிகள் தன் சொந்த காசை செலவு செய்யாமல், தன்னிடம் இருக்கும் வாக்கு வங்கியை காட்டி வெற்றி வாய்ப்புள்ள பெரிய கட்சியிடம் பேரம் பேசி அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து அதன் survival தொடர்கிறது. மீண்டும் அடுத்த தேர்தலில் அப்போது வெற்றி வாய்ப்புள்ள பெரிய கட்சியுடன் பேரம், கூட்டணி, survival, கட்சியின் வாக்கு சதவீதம் குறையாமல் பார்த்துக்கொள்ளல், இதுதான் தொடர்ந்து admk, dmk தவிர்த்த பிற்காலத்தில் தொடங்கப்பட்ட எல்லா கட்சிகளும் பின்பற்றி வரும் நடைமுறை.
இதில் சிறப்பாக செயல்பட்டு இன்று வரை சமாளித்து வரும் கட்சிகளில் முக்கியமானது பாமக. சரியாக முடிவெடுக்காமல் தன் பலத்தை இழந்த கட்சிகளுக்கு சிறந்த உதாரணம் தேமுதிக.
இவர்களால் ஒரு கட்டத்திற்கு பிறகு கூட்டணி வைக்காமல் அரசியல் செய்யவே முடியாது (நிதி, கட்சிப் பொருளாதாரம் காரணம்)
இன்னொரு பக்கம், என்றைக்கு இவர்கள் கூட்டணி என்று, எந்தக்கட்சியெல்லாம் விமர்சித்து கட்சி ஆரம்பித்தார்களோ, அதே கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தொடங்கியதுமே, அவர்கள் தனித்துவம் அங்கேயே முடிந்து விடுகிறது. பின் எக்காலத்திலும் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக வளரவே முடியாது. வாக்கு சதவீதம் என்னவோ அதே நிலையில் தேங்கி விடும் அல்லது கரையத் தொடங்கி விடும். இதுதான் இன்று வரை தமிழ்நாட்டில் கட்சிகள் நிலவரம்.
இதில் சமீபத்தில் சிக்கியவர் கமலஹாசன். அவசராவசரமாக ரஜினிக்கு முன் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ஆர்வக்கோளாறில் எப்படியோ 30 கோடி ரூபாயைத்திரட்டி கட்சி ஆரம்பித்து விட்டார், அதுவும் தேர்தலுக்கு 3 வருடங்களுக்கும் மேல் இருக்கும்போதே.
செயல்பட வேண்டுமென்றால் பணம் செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். Volunteers கூட்டமெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் வேலைக்கு ஆகாது. பணத்தை விட்டெரிந்தால்தான் இங்கே ஆள் கூட்டம், இல்லையென்றால் யாரும் சீந்த மாட்டார்கள். மேலும் இது போல் களத்தில் நிரூபணமாகாத கட்சிக்கெல்லாம் தொழிலதிபர்களும், corporate களும் 10 காசு செலவு செய்ய முன் வர மாட்டர்.
இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும், விரைவில் தேர்தல் வந்து விடும் என்கிற நப்பாசையில் அவசரமாக கட்சி ஆரம்பித்த கமல், போகிற போக்கைப்பார்த்தால் இந்த ஆட்சி 2021 வரை நீடிக்கும் என்று தெரிந்ததும், அதற்குள் கட்சி நிதியெல்லாம் கரைந்து விடும் என்ற பயத்தில், முதலில் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்காது என்று அறிவித்தவர், இப்போது மெல்ல மெல்ல நல்லது செய்பவர்களிடம் கூட்டணி அமைப்போம் என்று சொல்லி காங்கிரஸ்ஸிடம் பேசி வருகிறார். (அர்த்தம், அவர்கள் மட்டும்தான் இவருக்காக பணம் செலவு செய்ய தயாராக இருப்பவர்கள் என்றறிக)
இந்த நிலை தனக்கும் வரக்கூடாது என்கிற காரணத்துக்காகவே ரஜினி தாமதித்துக்கொண்டே வருகிறார். நிச்சயமாக அடுத்த 6 மாதங்களில் தேர்தல் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கட்சி தொடங்குவார். தீவிரமாக பிரச்சாரம் செய்வார்கள், செயல் படுவார்கள், செலவு செய்வார்கள். சினிமாவிலும் சரி அவர் மூவ் எப்பவும் தனித் தன்மை வாய்ந்தது.
அவர் ஜெயிக்கும் குதிரை என்று பெயர் எடுத்தவர்.
மக்களிடம் திரையில் பல ஆண்டுகளாக பேசி, மகிழ்வித்து கோடிக் கணக்கான மக்களின் நன் மதிப்பை பெற்றவர். அரசியலிலும் அதுவே நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அதற்காக தான் மிக மிக கவனமாக அதே நேரத்தில் ஆழமாக களம் இறங்க வேண்டும் என்று பொறுப்புடன் செயல் படுகிறார்.
நல்லதே பேசுகிறார்... காவலர்கள் வேண்டும் என்கிறார்.
எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசி #திருட்டுதிராவிடம் செய்ததை செய்ய மறுக்கிறார்.
நல்லதே சொல்வார்.. செய்வார். தலைவர் வெல்வார். 😍😍😍😍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...