Thursday, March 28, 2019

அருமையான கருத்துக்கள் ... முடிந்தால் படியுங்கள் ..

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..
துரோகிகளில் சிறந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன், நண்பனாக்கிக்கொள்வதற்கு...
பார்வை அற்ற ஒருவருக்கு சாலையை கடக்க உதவினேன், சிறுது நேர கண் தானம் செய்த திருப்தி..
மன்னிப்பு என்றால் என்ன ? பூக்களை கசக்கும் போது அது தரும் நறுமணம்...
சில நேரங்களில் தனிமை எனக்கு மிகவும் பிடித்துவிடுகிறது...
ஏனெனில் அங்கு தான் முகமூடியின் அவசியம் எனக்கிருப்பதில்லை....
நம்ம வாழ்க்கையில எது வேணும் எது வேணாம்னு நாம தான் தீர்மானிக்கனும்.. அப்போதான் அது நமக்கு பிடிச்ச வாழ்க்கையா அமையும்..
ஓர் நிராகரிப்பில் வேதனையின் உச்சத்தில் விழிகளில் இருந்து தடையை மீறி விழுந்தது என்றாலும் சிறு காயங்களுடன் பிழைத்து கொண்டது தன்மானம்
ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..
வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போயிடுது!!
என் இறப்பு எவருக்கும் வருத்தம் அளிப்பதாக இல்லாமல் போனாலும், ஒருவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவதாக அமைந்துவிடக் கூடாது!!!
மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!!
ஒரு சில பிரிவுகள் வலியும் வேதனையையும், ஒரு சில பிரிவுகள் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தரும்!!!
யாதொருவரின் அன்பிலும் தேங்கி நின்றுவிடாமல் விடை பெற்றுச் செல்வதே புத்திசாலித்தனம்..
உயிரற்ற மண்ணுக்கும் பசி!
உணவான மனித உடல்கள் மீது!
"உங்கள் சொந்த ஊர் என்ன?" என்ற கேள்வி பெரும்பாலும் ஜாதியை தெரிந்துக் கொள்ளவே கேட்கப்படுகிறது!! எனக்கு ஊரே இல்ல போங்கடா!!!
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும் அவை அனைத்தையும் உண்பதற்கு "மண்" உயிருடன் இருக்கும்... இதுதான் வாழ்க்கை....
எனக்கு பயம் என் திறமை மீது அல்ல, உங்கள் எதிர்ப்பார்ப்பின் மீதே!!!
சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம்விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசிஎண்கள் கண்டிப்பாக பழைய
செல்போனோட தொலைஞ்சுபோயிருக்கும்
வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பதுதான் பண்பாடு இப்ப வைபை பாஸ்வேர்ட் கொடுப்பதே சிறந்த பண்பாடு
நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..
அன்பு நிறைய பேர்கிட்ட கிடைக்கும் ஆனா ஒருவரிடம் நாம் இழந்த அன்பை ஆயுளே அழிந்தாலும் இன்னொருவரிடம் பெற முடியாது
இப்பவெல்லாம் "Silence Please"னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி "WIFI" Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்..
பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!
வாழ்க்கை எவ்வளவு வேகமாக பயணித்தாலும் இறுதி ஊர்வலத்தில் மெதுவாகத்தான் சென்று முடியும்!!
வேண்டாம் என விலகியவர்களும் வேண்டும் என இனணய வைக்கும் சக்தி பணத்திடம் உண்டு.
காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.
திருக்குறளை... வாழ்றதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்க'தான் அதிக பேரு..!
அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை!!
Money மட்டுமே மதிக்கப்படுகிறது... மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது..
முதுகில் குத்திய உன்னை திரும்பிப் பார்க்கிறேன், என்னுடனான நட்பின் மிச்சம் உன் பார்வையில் இருக்கிறதா என்று!!
நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும்
நம்மோட பொறுமை..!
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!
5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்தா பற்றாக்குறை லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம் அர்த்தம்.
எவ்வளவோ மூட நம்பிக்கை இருக்கு, அதில ஒன்னா, பொது இடத்துல எச்சில் துப்பினா சாமி வாயில குத்தும்ன்னு சொல்லி வளர்த்து இருக்கலாம்.
சிரிக்க நினைத்தால் சிரித்து விடுங்கள், மற்றவர்கள் பார்ப்பார்களே என கவலைப்பட்டால், அவர்கள் உங்களை ஆயுள் முழுதும் சிரிக்க விட மாட்டார்கள்
எல்லையை மீறினால் தான் சில நேரங்களில் நமக்கான எல்லையே தெரிகின்றது! வாழ்வில்
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை !
போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு... அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே.... ஊருக்கு தான் உபதேசமோ.?
நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!!
சோகமாய் இருப்பவரிடம் இருந்து"என்ன ஆச்சு"என்ற கேள்விக்கு "ஒண்ணுமில்லை" என்று வரும் பதிலுக்கு 'உன் வேலைய பாரு' என்றே பொருள் கொள்ளவேண்டும்!!
நல்லவனா இருக்கிறவன் கேள்விகள் கேட்டா
கெட்டவனா ஆகிடுறான்.!!*
*கெட்டவனா இருப்பவன் கேள்விகள் எதுவும் கேட்காததாலயே நல்லவனா ஆகிடுறான்.!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...