Friday, March 29, 2019

கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம்....

* அமலாக்கத்துறை ‘ஆப்பு’...
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய மேலும் 3 வர்த்தக நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது....
இவ்வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் இயக்குனர்கள் மீது 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டு பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை இன்று அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது....
வழக்கு கடந்து வந்த பாதை...
கடந்த, 2007ல், காங்., தலைமையிலான முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, மொரீஷியஸ் நாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் நிதி கிடைக்க, எப்.ஐ.பி.பி., எனப்படும் அன்னிய முதலீட்டு வாரிய அனுமதி வழங்கப்பட்டது.....
இதில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தி, ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் அதன் இயக்குனர்கள், பீட்டர் முகர்ஜி, ராணி முகர்ஜி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.....
ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுத் தர, நிதியமைச்சகத்தில் தனக்குள்ள செல்வாக்கை, கார்த்தி பயன்படுத்தியதாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு, பிப்., 28ல், கார்த்தியை, சி.பி.ஐ., கைது செய்தது. பின், அவர் ஜாமினில் வெளிவந்தார்.இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தது.....
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக, கார்த்திக்கு சொந்தமாக, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள, 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கியது
தேர்தல் நேரத்தில், கார்த்தி சிதம்பரம் சொத்து முடக்கப்பட்டிருப்பது, அவருக்கு சரிவு ஏற்படுத்தும் என கருதப்படுகிறது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...