Sunday, March 24, 2019

கரூரில் ஜோதிமணிக்கு தி.மு.க., எதிர்ப்பு அப்சரா ரெட்டிக்கு கனிமொழி ஆதரவு.

Advertisement
 கரூரில் ஜோதிமணிக்கு தி.மு.க., எதிர்ப்பு அப்சரா ரெட்டிக்கு கனிமொழி ஆதரவு
மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டி, கரூரில் களமிறங்க, காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு தருமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.கரூர் தொகுதியில், ஜோதிமணியை நிறுத்துவதற்காகவே, அந்த தொகுதியை, தி.மு.க.,விடம் வலுக்கட்டாயமாக கேட்டு வாங்கியது, காங்கிரஸ் மேலிடம். முன்னாள் அமைச்சர், சின்னசாமி போட்டியிடுவதற்காக, அந்த தொகுதியை தர, தி.மு.க., மறுத்தது. காங்., தலைவர், ராகுல் தலையிட்டதால், தி.மு.க., இறங்கி வந்தது.ஆனால், 'ஜோதிமணியை வேட்பாளராக நிறுத்தினால், நாங்கள் தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்' என, கரூர், தி.மு.க.,வினர் கொடி பிடித்துள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின் எடுக்கப்பட்ட, 'சர்வே'யில், துணை சபாநாயகர், தம்பிதுரைக்கே வெற்றி வாய்ப்பு என, தெரிய வந்துள்ளது. இதனால், தி.மு.க., மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.இதற்கிடையில், கரூர் அல்லது ஆரணி தொகுதியில் வாய்ப்பு கேட்டு, அப்சரா ரெட்டி விருப்ப மனு அளித்திருந்தார். அதற்கு முன், அவர் தன் எண்ணத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனிமொழி போன்றவர்களிடம் கூறி, யோசனை கேட்டு உள்ளார். அவர்கள், 'பலவீனத்திற்கு பதில், பலத்தை காட்டுங்கள்; நாங்கள் ஆதரவாக, பிரசாரம் செய்வோம்' என, உறுதி அளித்துள்ளனர்.இதையடுத்து, டில்லி சென்ற அப்சரா ரெட்டி, காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து, 'சீட்' கேட்டு வருகிறார். லோக்சபா தேர்தலில், இதுவரை திருநங்கைக்கு, எந்த கட்சியும் வாய்ப்பு அளிக்கவில்லை. தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில், அப்சரா ரெட்டிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என, திருநங்கைகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.டில்லியில் அப்சரா ரெட்டியை சந்தித்த, முன்னாள் தலைவர் இளங்கோவன், 'திருநங்கைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினால், அது புரட்சிகரமான முடிவு' என, கூறியுள்ளார்.இது குறித்து, அப்சரா ரெட்டி கூறியதாவது:சமூக பிரச்னை தொடர்பாக, ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில், இதுவரை, 400 கட்டுரைகளை எழுதியுள்ளேன். அ.தி.மு.க.,வில், செய்தி தொடர்பாளராக பணியாற்றினேன். ஜெயலலிதா மறைந்த பின், ராகுலை தலைவராக ஏற்று, காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். அகில இந்திய மகளிர் அணி பொதுச்செயலர் பதவியை வழங்கினார்.கரூர் அல்லது ஆரணியில் போட்டிட விரும்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...