Saturday, March 23, 2019

எனக்கு சில சந்தேகங்கள்...

அன்புக்குரிய ஸ்டாலின் அவர்களுக்கு.... நான் மிகச் சிறந்த திமுக அனுதாபி தான்...
எனக்கு சில சந்தேகங்கள்...
உங்கள் தேர்தல் அறிக்கை மிக மிக அருமை.
நிறைவேற்றுங்கள்... தமிழகம் உங்களை மறக்காது..
ஆனால் ஒன்று...
வாரிசுகளுக்கு எதற்க்காக சீட் கொடுத்தீர்கள்??
நம் கட்சியில் வேறு தொண்டன் இல்லையா???
இல்லை நீங்கள் ஜெயிக்க முடியாது என்று நினைத்தீர்களா???
தவறு செய்து விட்டீர்கள் அண்ணா...
மரியாதைக்குரிய எடப்பாடி அண்ணனுக்கு....
அம்மா தான் எனக்கு வீடு கட்ட பணம் கொடுத்தாங்க... அன்றிலிருந்து நான் அதிமுக அனுதாபி தான்...
அண்ணா ஒரு சந்தேகங்க...
பாமாக வை ஏன் சேர்த்தீங்க??
வாரிசுகளுக்கு ஏன் சீட் கொடுத்தீங்க....
நல்ல தலைவன் உருவாக நிறைய அர்ப்பணிபுகள் தேவை...
உங்களை எப்படி நம்புவது???
காவலாளி மோடி அய்யாவுக்கு...
வணக்கம்... உங்கள் மேல் வெறுப்பு ஒன்றும் இல்லை... நீங்கள் தமிழ் நாட்டுக்காக என்ன செய்தீர்கள்.? மனசு விட்டு சொல்லுங்கள்...
நீங்கள் வாரிசு அரசியலை வளர்க்கலயா?
உண்மை தேவை...
காவலன் என்று எழுதிக் கொண்டால் மட்டும்
போதுமா???
உங்க யாரையும் நம்ப முடியல... அட போங்கடா...
நான் யாருக்கு ஓட்டு போடறது?????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...