Saturday, March 23, 2019

அப்பப்பா நல்ல வியாபாரம் – சிந்திப்பீர்!

அப்பப்பா நல்ல வியாபாரம் – சிந்திப்பீர்!

அதிவேகமாக வளர்ச்சி அடைந்துவரும் மக்க‍ளின் வாழ்க்கைச் சூழலில் ஹார்லிக்ஸ் இப்போது எல்லோரும் வாங்கி குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் காபிக்கு மாற்றாக குடிக்கும் நிலை உள்ளது. 1967களில் ஹார்லிக்ஸ் (Horlicks) விலை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூபாய் 5/55 பைசா மட்டுமே. அதுவும் அவ்வளவு சீக்கிரம் வாங்கமுடியாது. ஒருவர் ஒரு பாட்டில் வாங்கி வருவதே குதிரை கொம்பு. ஆம் கிடைப்பது அரிது. அரசு கிடங்கில் மட்டுமே கிடைக்கும் அதுவும் கூடுதலாக பைசா 0/25 சேர்த்து அதாவது ரூபாய் 5/70 கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். அப்போது ஒரே பெயரில் மட்டுமே ஹார்லிக்ஸ் பாட்டிலில் அடைக்கப் பட்டு விற்பனை செய்யப்பட்டது. பிறகு பவுச் மூலம் விற்பனை. தொடர்ந்து குழந்தை களை கவர, பூஸ்ட் விளையாட்டு வீரர்கள் மூலம் விற்பனை. மேலும் ஹார்லிக்ஸ் பெண்களை கவர வுமன் ஹார்லிக்ஸ். அப்பப்பா நல்ல வியாபாரம். இதெல்லாம் யாரால் நம் மக்களால் மட்டுமே. ஆனால் நமது பாரம்பரிய உணவு வகைகள் எங்கே போனது என்று தெரியவில்லை. இந்த விளம்பர மோகத்தில் உறங்கி கிடந்தது போதும் விழித்தெழுங்கள் மக்க‍ளே நமது பாரம்பரிய பானங்களையும் உணவு களை இனிமேலாவது உட்கொள்ள‍ தயங்காதீர். பெரும் வணிக நிறுவனங்களின் கவர்ச்சி விளம்பரத்தில் மதிமயங்கி அவர்களிடம் பணத்தை கொட்டி கொடுத்து அவர்களின் சத்தில்லா பானங்களையும் உணவுகளையும் நம்மை உண்பதை நிறுத்துங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...