Sunday, March 31, 2019

மூன்று தொகுதிகளுக்கான தேர்தல்: நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று.

தமிழகத்தில், 18சட்டசபை தொகுதிகளுடன், விடுபட்ட மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து, தேர்தல் நடத்தி விட வேண்டும் என்பதில், தி.மு.க., பகீரத முயற்சிகளை எடுத்தது. ஆனால், அது எடுபடாமல் போனது. இருந்தாலும், தேர்தலுக்கான உத்தரவாதத்தை, ஆணையத்திடம் பெற்றது, தி.மு.க.,வுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
 மூன்று,தொகுதிகளுக்கான,தேர்தல்,நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று
தமிழகத்தில், 39லோக்சபா தொகுதிகளுடன், எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தால், காலியான, 18 தொகுதிகளுக்கும் சேர்த்து, ஏப்., 18ல், தேர்தல் நடக்க உள்ளது. 
ஆதரவு

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து, தேர்தலை நடத்தவும், வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை எனவும் கூறி, தலைமை தேர்தல் ஆணையத்தை, தி.மு.க., அணுகியது. 

கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டியது, தி.மு.க., தான்.அதோடு விடவில்லை; உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு  தொடுத்தது. இந்த வழக்கில், டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், காங்., முன்னாள், எம்.பி.,யு மான, அபிஷேக் மனு சிங்வி ஆஜராவதற் கான ஏற்பாடுகளும் நடந்தன. அவரே, உச்ச நீதிமன்றத் தில் வாதாடினார். தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனு தாக்கல்




டில்லியில் காய்களை நகர்த்திய, தி.மு.க., சென்னையிலும் நகர்த்தியது. திருப்பரங்குன்றம் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடுத்தவர், தி.மு.க., வேட்பாளரான, டாக்டர் சரவணன். இவர், வழக்கை வாபஸ் பெற்றால், தேர்தலுக்கு தடை இருக்காது எனக் கருதி, அதற்கான மனுவை தாக்கல் செய்யும்படி, தலைமை அறிவுறுத்தியது. அதன்படி, மனுவும் தாக்கல் ஆனது.ஆனால், வழக்கை வாபஸ் வாங்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. 

தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்த அந்த வழக்கில், நீதிபதி உத்தரவு பிறப்பித்து விட்டதால், முடிவுக்கு வந்து விட்டது. ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கையும் வாபஸ் பெறுவதாக, தேர்தல் தேதி அறிவிக்கும் முன், டாக்டர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்து விட்டார்.இப்படி, இரண்டு தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகளும் முடிவுக்கு வந்து விட்டதால், அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் தடங்கல் இருந்தது.
உத்தரவாதம்


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகளிடம், மூன்று தொகுதிகளின் நிலை பற்றி தெரிவிக்கப்பட்டது. இருந்தும், ஆணையம் சார்பில், சட்டப்படி, உரிய அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என, உத்தரவாதம் அளித்ததால், வழக்கை, நீதிபதிகள் முடித்து வைத்தனர். ஏப்., 18ல் இல்லை என்றாலும், ஓட்டு எண்ணும், மே,23க்கு முன், மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை யும் நடத்தி விட வேண்டும் என, தி.மு.க., கணக்கு போட்டது.

தேர்தல் ஆணையமோ, குறிப்பிட்டு தேதி எதையும் தெரிவிக்காமல் விட்டதால், மே, ௨௩க்குள், தேர்தலுக்கான சாத்தியம் இல்லை. அதேநேரம், தேர்தல் ஆணையத்திடம் உத்தர வாதம் பெற்றது, தி.மு.க.,வுக்கு ஆறுதலான விஷயம்.
அறிவிப்பு


தேர்தல் முடிவுகள் வெளியான பின், மூன்று தொகுதிகளுடன், காலியாக உள்ள கோவை மாவட்டம், சூலுார் தொகுதிக்கும் சேர்த்து, தேர்தல் தேதி அறிவிப்பு வரும். நான்கு தொகுதி இடைத்தேர்தலில், இதே ஆர்வம், முனைப்பை, தி.மு.க., காட்டுமா என்பது, மே, ௨௩ அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்கு பின் தெரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...