வரும் மே மாதம் குஜராத்தில் காலியாகும் ராஜ்யசபா சீட், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு தரப்படும் என தெரிகிறது. இந்த இடத்தில் தற்போது எம்.பி.,யாக இருப்பவர் அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.,வில் 78 வயதுக்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி கல்ராஜ் மிஸ்ரா, புவன் கந்துாரி போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். ‛‛உங்களுக்கு வயசாச்சு. போட்டியிட்டதெல்லாம் போதும். ஓய்வெடுங்க'' என்று அவர்களிடம் கட்சி கூறிவிட்டது.

இவர்களில் அத்வானிக்கு குஜராத்தில் காலியாகும் ராஜ்யசபா இடம் தரப்பட உள்ளது. லோக்சபா தேர்தலில் அமித்ஷா போட்டியிடுவதால், அவரது ராஜ்யசபா பதவி வரும் மே மாதம் காலியாகிறது. இந்த இடம் அத்வானிக்கு தரப்பட உள்ளது. ஜோஷி நிலைமை தெரியவில்லை.

No comments:
Post a Comment