Friday, March 29, 2019

குழந்தைகளுக்கு கொடுங்கள் தேன் நெல்லி ரசகுல்லா...

நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டு, களைத்து போய் வீட்டுக்கு வருவார்கள், வரும்போது வீட்டில் என்ன தீனி இருக்கும் நாம் சாப்பிடலாம், என்று நினைத்துக்கொண்டே தான் வருவார்கள். அவர்களுக்கு நல்ல சத்தான உணவு தருவது நம் கடமை. அவர்களுக்காக இந்த இயற்கை உணவு.
பெரிய நெல்லிக்கனி அனைவரும் அறிந்ததே, அதில் விட்டமின் சி அளவு மிக அதிகம். இது முடி மற்றும் உடலில் அழகை கொடுக்கக்கூடியது. இந்த நெல்லிக்கனி ரொம்ப சத்துக்கள் நிறைந்தது. அதே போல் தேனின் நற்குணம் மிக அதிகம், இதில் இரும்புச்சத்துக்கள் நிறைந்திருக்கும். இந்த இரும்புச்சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு ரொம்ப தேவை. இந்த இரண்டையும் வைத்து தயார்செய்யும் உணவுதான் தேன் நெல்லி ரசகுல்லா…
நன்றாக கனிப்பதத்தில் இருக்கும் நெல்லிக்காய்கள் 10 எண்ணம் எடுத்து நன்றாக வெந்நீரில் கழுவிவிடவும். பின் சுத்தமான அக்மார்க் குறியிட்ட தேன் 100 கிராம் வாங்கிக்கொள்ளவும். நெல்லிக்காய்களை இரண்டாக வெட்டலாம் அல்லது அதை கீற்றுப்போல் கத்தியால் குத்தி கீறிவிடவும். உருண்டையாக இருக்கட்டும்.
பின் நெல்லிக்காய்களை தேனில் ஊறவிடவும். சிறிது இஞ்சியையும் பல்போட்டு ஊறவிடவும். நல்லவாசமாகவும் சுவைமிக்கதாகவும் இருக்கும். இரண்டு நாட்கள் தொடர்ந்து ஊறும் போது தேன், நெல்லிக்காயின் கீறல் வழியாக உள்ளே சென்று நெல்லிக்காயை ஊறவைத்துவிடும். சுவையையும் மாற்றிவிடும். இதை குழந்தைகளுக்கு தினமும் காலையில் அல்லது மாலையில் ஒரு கனியை தரவும்.
இது உடலில் கால்சியத்தையும், இரும்பையும் ஒரே நேரத்தில் அதிகரிக்கும். நல்ல தேக புஷ்டியாக குழந்தைகள் வளர்வார்கள். பெரியவர்கள் இதை சாப்பிடுவதால் கல்லீரல் நோய்கள், சளி, இருமல், சிறுநீரகக்கல், நரைமுடி, உடற்சோர்வு, இரத்தச்சோகை, மாதவிலக்கு வலிகள், முக அழகு என்று எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
இது ஒரு காயகல்பம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...