Thursday, August 1, 2019

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள்.

👉🏽எந்த குழந்தையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பது இல்லை ஆனால் அரசுப் பள்ளிகளை ஏன் மூடுகிறீர்கள் என்று போராட்டம்.
👉🏽மழைபெய்யும் காலங்களில் மழை நீரை சேமிப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை, அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டங்களை வீடுகளில் ஒழுங்காக செயல்படுத்துவதில்லை. ஆனால் தண்ணீர் இல்லாத காலத்தில் அரசை மட்டும் குறை கூறுவது.

👉🏽இங்கு உள்ள அனைவரும் வசதிக்காக கார், பைக் வாகனங்கள் வாங்க வேண்டியது. ஆனால் பெட்ரோல் டீசல், கேஸ் போன்ற ஹைட்ரோகார்பன் எடுக்க கூடாது என்று போராடுவது.
👉🏽முப்பது வருடத்திற்கு முன்னால் ஒரே ஒரு டிவிஎஸ் 50 சிசி வண்டிகள் மட்டுமே வீட்டிற்கு இருந்தது. இப்போது கார், பைக் என வீட்டுக்கு வீடு பல வாகனங்கள், ஆனால் ரோடு போட கூடாது என்று போராடுவது.
👉🏽விவசாயப் பொருட்கள் விலை ஏறினால் அரசை குறை கூறுவது, தக்காளி எப்பவும் கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது. அதேசமயம் விவசாயிகளுக்கு ஆதரவு என்று ஒரு போராட்டம்.
👉🏽ஆங்கிலம் கலக்காமல், தமிழ் மொழியில் தொடர்ந்து நான்கு வாக்கியங்கள் பேச முடியவில்லை. ஆனால் மத்திய அரசு தமிழை அளிக்கிறது என்று ஒரு போராட்டம்
👉🏽 தரமான மருத்துவர்கள் இல்லை என்று ஒரு போராட்டம், தரமான மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு நுழைவுத்தேர்வு கொண்டு வந்தால் அதற்கு எதிரான ஒரு போராட்டம்
👉🏽 500 இன்ஜினியரிங் காலேஜ் களில் மாணவர்களைச் சேர்ப்பது. படித்து முடித்து வரும் இன்ஜினியர்கள் வேலை செய்ய தொழிற்சாலையை அமைக்க விடாமல் இடம் எடுப்பதற்கு எதிர்த்து போராடுவது.
👉🏽 சௌகரியத்திற்காக பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங்மெஷின், ஏசி பயன்படுத்துவது. ஆனால் மின்சாரத்தை உருவாக்க பவர் பிளான்டை அமைக்க எதிர்த்துப் போராடுவது, மற்றும் மின்சாரம் கொண்டு வருவதற்கு மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது.
இங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் நாம் தான் காரணமென்று மக்கள் உணரும் வரை யாரோ ஒருவர் சுயநலத்திற்ககாக தூண்டி விட்ட போராட்டத்தை, மக்களும் ஏன் போராட்டம் எதற்கு போராட்டம் என்று சிந்திக்காமல் இருந்தால் போராடிக் கொண்டே இருக்க வேண்டியது தான். தற்போது இந்தியாவில் அதிக போராட்டம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இப்படி போராடிக் கொண்டே இருந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச கம்பெனிகளும் இந்த மாநிலத்தை விட்டு வேறு எங்காவது சென்று தொழிற்சாலை ஆரம்பித்து விடுவார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...