தூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகம்மது அதிப்பை உளவுத்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்தியாவுக்குள் அனுமதி இன்றி நுழைந்திருப்பதால் அவரை போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 2015ல் மாலத்தீவு துணை அதிபராக இருந்தவர் அகம்மது அதிப். எதிர்கட்சியினர் மீது துப்பாக்கியால் சுட்டதால் தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றவர். சமீப காலமாக வீட்டுக்காவலில் இருந்த அவர் இன்று சரக்கு கப்பல் ஒன்றில் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார். இவரது வருகை பற்றி உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவரை நடுக்கடலில் கப்பலை மறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவரை கைது செய்வதா அல்லது மாலத்தீவுக்கு திருப்பி அனுப்பி வைப்பதா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment