Friday, August 2, 2019

வாழ்க்கை என்பது நாணயம் போல.

இன்பம் ஒரு பக்கத்திலும், துன்பம் ஒரு பக்கத்திலும் இருக்கும்.
*ஒரு நேரத்தில் ஒரு பக்கம் தான் கண்ணுக்குத் தெரியும்*.
*மறந்துடாதிங்க மறுபக்கம் அதன் வாய்ப்பிற்காக காத்திருக்கும்*.
புரிந்து கொண்ட உண்மையான அன்பு எவ்வளவு காயபட்டாலும்
*நம்மை விட்டு ஒருபோதும் பிரியாது*
காயப்படுத்தியவர்கள் மறந்து விடலாம். காயப்பட்டவர்கள் என்றும் மறப்பதில்லை *காரணங்களையும், அதன் வலிகளையும்*.
நம்மை மறந்து போனவர்களுக்கு கூட நாம் ஒரு நாள் நினைவிற்கு வருவோம்.
*நமது தேவை அவர்களுக்கு தேவைப்படும் போது*.
முன்னேற வேண்டும் என்று விரும்பினால். யாருடனும் சண்டை போடாதீர்கள்.
*அதில் நேரம் வீணாகிறது*.
ஒட்டி நிற்பதை காட்டிலும், தள்ளி நிற்கும்போது அழகாக காட்டும் கண்ணாடியைப்போல் சில உறவுகள்.
*தள்ளி நிற்பதுதான் நமக்கு அழகு*.
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம்வருந்தாதே. ஏனெனில் அது தான்.
*உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்க போகிறது. துணிந்து செல் துணிவுடன் வெண்று விடலாம் வாழ்க்கையை*.
தீயவை முதலில் சொர்க்கமாகத் தோன்றும். முடிவில் நரகமாகி விடும்.
*நல்லவை முதலில் நரகமாக தோன்றும். முடிவில் சொர்கமாகும்*.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...