1. காஷ்மீர் மக்கள் நீங்கள் சொல்வது போல, சிறு குழந்தைகளா? அப்படி என்றால், அவர்களால் ஈவு, இரக்கமின்றிக் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினைரையும், அப்பாவிப் பொது மக்களையும், என்ன சொல்லி அழைப்பீர்கள்?
2. அரசியல் சாசனச் சட்டத்தின் 370-வது பிரிவு, ஷேக் அப்துல்லா என்ற தனி மனிதருக்காக, நேருவால் சட்டத்துக்குப் புறம்பான முறையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு இடைச் செருகலாய் நுழைக்கப்பட்டது என்பதை அறிவீரா?
3. இந்தப் பிரிவு, அரசியல் சாசன நிர்ணய சபையிலோ, பாராளுமன்றத்திலோ, அன்றைய கால கட்டத்தில் (1949-ல்) விவாதிக்கக் கூடப் படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
4. இந்தியாவுடன் இணைந்த, ஏனைய 565 சமஸ்தானங்களுக்கு வழங்கப்படாத இந்தச் சிறப்புச் சலுகை, காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்டது ஏனோ?
5. 1947-ல், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போது, இதனைப் பற்றிய எந்தக் குறிப்பும், இணைப்பு ஒப்பந்தத்தில் (Instrument of Accession) இல்லை என்பதை நீங்கள் எங்கும் படித்துத் தெரிந்து கொண்டதில்லையா?
6. 1990-களில், பல்லாயிரம் ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாகக் காஷ்மீரில் வாழ்ந்து வந்த காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3.50 லட்சம் பேர், வலுக்கட்டாயமாகக் காஷ்மீரை விட்டு விரட்டப்பட்டார்களே, அவர்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? சொந்த வீடிழந்து, தம் வாழ்விழந்து ஓடி வந்த அவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன? ஈழத் தமிழருக்காக இரங்கும் நாம், அழுது கண்ணீர் வடிக்கும் நாம், காஷ்மீர் பண்டிட் குடும்பங்களைப் பற்றி ஏன் சிந்திக்க மறந்தோம்? பேச மறந்தோம்?
7. காஷ்மீர் தீவிரவாதம் என்பதும் உங்கள் கணக்குப்படி பொய் தானோ?
8. தனக்கெனத் தனியான அரசியல் சட்டம், தனியான தேசியக் கொடி, தனி தேசிய கீதம் கொண்டுள்ள காஷ்மீர், 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் தொடர்வது எந்த வகை நியாயம்?
9. பிற மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காஷ்மீருக்குப் பொருந்தா என்பதை ஒப்புக் கொள்ள இயலுமா?
10. எந்த வித அடிப்படை உரிமைகளையும் தம் அரசியல் சாசனத்தின் ஓர் அங்கமாகக் கொள்ளாத காஷ்மீர், எத்தனை காலம் இப்படியே நீடிப்பது?
11. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய இறுதித் தருணம் இப்போது வந்து விட்டது என்பதை, இப்போதும் உங்களைப் போன்றோர் ஏற்க மறுப்பது ஏன்?
No comments:
Post a Comment