"வாரிசு அரசியல்" உருப்படாது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. நேருவுக்குப்பின் இடையில் மறைந்த லால்பகதாரின் நல்லாட்சி இருந்தாலும், காமராஜரின் தப்புக் கணக்கால் இந்திரா பிரதமரானார். அப்போதே காமராஜர் மொரார்ஜிக்கு வாய்ப்பளித்திருந்தால் காங்கிரஸ் இவ்வளவு சீர்கேடுகளைச் சந்தித்திருக்காது.
சரி.. போகட்டும்.... இத்திராவின் ஆளுமை ஓரளவு நிலையான ஆட்சியைத்தந்தாலும், சுற்றி இருந்த ஜால்ராக்களால் காங்கிரஸ் நேரு குடும்பத்தின் சொத்தானது.
இந்திரா மறைவிற்குப் பின் நாட்டின்மீது திணிக்கப்பட்ட பிரதமர், நல்லது செய்ய நினைத்தாலும் சுற்றி இருந்த காக்கா கூட்டத்தினால் அடுத்த தேர்தலிலேயே படுவீழ்ச்சியைச் சந்தித்தார்.
பிறகு வந்த (ராஜீவ் முதுகில் குத்திய) வி.பி.சிங், அடுத்து சந்திரசேகரின் அல்பாயுசு ஆட்சிகளுக்கு பிந்தைய தேர்தலில் 'நம்பிக்கை நட்சத்திர'மாக எதிரபார்க்கப்பட்ட ராஜீவ் காந்தி சொந்த மண்ணில் சதிவலையில் சிக்கி அந்நிய கைக்கூலிகளால் படுகொலைக்காளானார்.
நேரு குடும்பம் சாராத நரசிம்மராவ் பிரதமராகி நிலையான நல்லாட்சி தந்ததோடு, நாட்டையம் வளர்சிப்பாதையி்ல் திருப்பினார்.
தொடர்ந்த தேர்தல்களில் அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்து பின் பதவி ஏற்ற பாரதிய ஜனதாவின் வாஜபாய் ஆட்சி 'ஸ்படிகம்' போல தூய ஆட்சி செய்தாலும், அடுத்த தேர்தலில் பதவி வெறி பிடித்த சோனியா காங்கிரஸ் வென்றாலும் அயல்நாட்டவர் என்ற பிரச்னையால் சோனியா ஆட்சியில் அமரமுடியாமல், 'டம்மி'யாக மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டு சோனியா நிழல் பிரதமராக பத்தாண்டு சீரழிவு ஆட்சி நடந்தது.
2014 ல் குஜராத் முதல்வர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி பிரதமராகி, எதிராக கட்சிகளின் பலம்பல்களையும் மீறி 2019ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்து உலகமே திரும்பிப் பார்க்கும் பிரதமராக இருப்பது உங்களுக்கே தெரியும்.
உலக அரங்கில் நோயாளி போலிருந்த இந்தியா தற்போது உலகநாடுகள் வியந்து நோக்கும் வல்லரசாகி வருகிறது, பல போட்டி, பொறாமைகளுக்கிடையிலும்....!!! (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்...!!)
No comments:
Post a Comment