Tuesday, October 22, 2019

சென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த கொள்ளையன் முருகன்.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவ கொள்ளையன் முருகன், தான் சென்னையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக பெங்களூரு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.





திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் அக்.,2 ம் தேதி ரூ.12.31 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் வகுத்து கொடுத்த திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவர், சமீபத்தில் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு சென்னையில் மட்டும் 60 க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் தொடர்பு இருப்பதாகவும், இவற்றில் இருந்து தப்புவதற்காக சென்னையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ரூ.30 லடசம் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறி உள்ளார்.




இந்த கொள்ளை சம்பவத்திற்காக தான் 7 பேரை பயன்படுத்தியதாகவும், இவர்களை தான் புழல் மற்றும் திருச்சி சிறையில் இருந்த போது சந்தித்தது பழக்கம் ஏற்பட்டதாகவும் முருகன் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். சென்னையில் அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60 வீடுகளில் தாங்கள் கைவரிசை காட்டியதாகவும் கூறி உள்ளார்.




பெங்களூருவில் நடந்த சுமார் 80 கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக முருகனிடம் விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார், முருகனை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக முருகனை 7 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். முருகன் அளித்த தகவலின் பேரில் சென்னை இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, முருகன் வாக்குமூலத்தில் கூறியது போன்று தான் எந்த லஞ்சமும் பெறவில்லை என மறுத்துள்ளார். இது பற்றி பெங்களூரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்ஸ்பெக்டரிம் இது பற்றி பெங்களூரு போலீசார் விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...