Thursday, October 31, 2019

சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம்.

சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம்
முருகன்


















சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து இந்த விரதத்தை மேற்கொண்டால் இன்னும் சிறப்பு.

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கான அர்த்தம் என்னவென்றால், சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் (கர்ப்பப்பையில்) கரு உருவாகும் என்பதே அர்த்தமாகும். ஆனால் இந்த பழமொழி காலப்போக்கில் “சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்” என்று மாறிவிட்டது. அதாவது சட்டியில் சாப்பாடு இருந்தால்தான் அதை கரண்டியால் எடுக்க முடியும் என்று மாற்றி விட்டனர். அகப்பை என்பது கரண்டி போல் உருவ அமைப்பை கொண்ட ஒரு பொருளை குறிக்கும்.

குழந்தை வரத்திற்காக மட்டும்தான் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் வீட்டில் நிம்மதி, செல்வம், ஒற்றுமை மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெருக இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சஷ்டி விரதம் என்பது பொதுவாக 6 நாட்கள் கடைபிடிக்கப்படும். ஏழாவது நாள் அழகர் முருகனின் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடைசி நாளில் மட்டுமாவது, ஒருவேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்கலாம். திருமணம் ஆகாதவர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

முன்பெல்லாம் சஷ்டி விரதம் மிகவும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எச்சில் கூட முழுகாமல் காற்றை மட்டுமே சுவாசித்து சிலபேர் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள். சிலர் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சில பேர் முதல் நாளில் ஒரு மிளகு, இரண்டாவது நாளில் இரண்டு மிளகு, மூன்றாவது நாளில் மூன்று மிளகு இப்படி ஆறு நாட்கள் வரை உட்கொண்டு விரதத்தை மேற்கொள்வார்கள். விரதம் இருப்பதன் மூலம் வயிறு காலியாக இருக்கும். இதன் காரணமாக எந்தவிதமான நச்சு சுரப்பிகளும் சுரக்காமல் இருக்கவும், வயிற்றை தூய்மைப்படுத்தவும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...