Thursday, October 31, 2019

வாழ்வில் சாதித்துக் கொண்டே இருங்கள்.

தோல்வியின் தழும்புகளை மட்டுமே ஆராய்ச்சி செய்யாதீர்கள்.கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த வெற்றிகளை எண்ணிப் பாருங்கள்.அந்த உணர்வு உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும்.
உங்களுக்கு மரியாதை தராத நபர்களிடம் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.எதிர்மறையாக பேசுபவர்களை அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
யாரையாவது காயப்படுத்திடின் ,தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.அதனால் உங்கள் மதிப்பு உயரும்.
அடுத்தவர்களை மரியாதைக் குறைவாக நடத்தினால் ,பயத்திலும் எரிச்சலில் மண் வாரி போட்டு சாபமே தருவார்கள்.
சாதனைகள்தான் உங்கள் மதிப்பையும்,மரியாதையையும் உயர்த்தும்.வாழ்வில் சாதித்துக் கொண்டே இருங்கள்.
யாருடைய உறவையும்,நட்பையும் அடைய பிச்சை எடுக்காதீர்கள்.அலட்சியம் செய்பவர்களை விட்டு மெல்ல விலகுங்கள்.அப்போதுதான் உங்கள் மரியாதை காப்பாற்றப்படும்.முற்றும்.இனிய காலையில் அனைவருக்கும் நல் வணக்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...