Thursday, October 31, 2019

தங்க பொது மன்னிப்பு திட்டம் பட்ஜெட் நெருங்கும் நிலையில் அலையடிக்கும் அனுமானங்கள்.

கணக்கில் காட்டாமல், வீடு மற்றும் நிறுவனங்களில் வைத்திருக்கும் தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவும் வகையில், 'தங்க பொது மன்னிப்பு திட்டம்' ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன.

தற்போது ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள், வருமான வரி அறிக்கையில், தங்களிடமுள்ள தங்கத்தையும் தெரிவிக்க வேண்டும். இருப்பினும், கணக்கில் காட்டப்படாத தங்கம் மக்களிடம் ஏராளமாக உள்ளது.

புதிய முயற்சி

இப்படிப்பட்ட தங்கத்தை வெளியே கொண்டு வரும் வகையில், 2015- - 16ம் ஆண்டு மத்திய
பட்ஜெட்டில், ஜி.எம்.எஸ்., எனும் தங்க நாணயமாக்கல் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.இருப்பினும், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி, வங்கிகள் மொத்தம், 11.1 டன் தங்கத்தை
மட்டுமே சேகரித்தது. மக்களிடம் இருப்பதாக மதிப்பிடப்பட்ட அளவுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவாகும். தங்கத்தை வெளியே கொண்டு வரும் முயற்சிக்கான இந்த திட்டம் வெற்றி பெறவில்லை.
தங்க, பொது, மன்னிப்பு, திட்டம் ,பட்ஜெட் நெருங்கும், நிலையில் அலையடிக்கும், அனுமானங்கள்

இந்நிலையில், அடுத்த கட்டமாக, புதிய முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள்
வருகின்றன.இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் பணமதிப்பிழப்பு
நடவடிக்கைக்கு பின், கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக செய்யப்படும், இரண்டாவது பெரிய முயற்சியாக இதுஇருக்கும்.ஒரு நபர் அதிகளவிலான தங்கத்தை, ரசீதுகள் இன்றி வைத்து
இருந்தால், அதன் முழு மதிப்பில், 30 சதவீதத்திற்கு வரி செலுத்த வேண்டியதிருக்கும். கல்வி வரியுடன் சேர்த்து, 33 சதவீதமாக அது இருக்கலாம். இன்னும் எவ்வளவு வரிவிகிதம் என்பது முடிவாகவில்லை.

கறுப்பு பணம்


இதற்காக, தங்க வாரியம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதில் அரசு மற்றும் தனியார் துறைக ளின் பிரதிநிதிகள், உறுப்பினர்களாக பங்கெடுப்பார்கள்.பிரதமர் அலுவலகம், நிதிஅமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விரைவில் இந்த திட்டத்தை இறுதி செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.திருமணமான பெண்களைப் பொறுத்தவரை, அவர்களிடம் உள்ள தங்க நகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை இந்த திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மேலும், இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் படி அபராதம் மற்றும் வட்டி செலுத்துவதில், தனிநபர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், வருமான வரி துறையினர் இந்த திட்டம், பெரிய அளவில் கைகொடுக்காது என, கருதுகின்றனர்.இது குறித்து, வருமான வரி துறை தரப்பில் பேசிய ஒருவர் கூறியதாவது:

உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பலர் தங்களது கறுப்பு பணத்தை தங்கமாக
மாற்றினர்.அவர்கள், இப்போது தங்களிடம் இருக்கும் தங்கத்தை கணக்கில் கொண்டு வருவதற்கு, இந்ததிட்டம் உதவி செய்வதாக அமைந்துவிடும்.இவ்வாறு அவர்கூறினார்.மேலும் சில தரப்பினர், இந்த திட்டம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள்.


வதந்திகள்


உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:இத்தகைய வதந்திகள் கடந்த சில காலமாக பரவி வருகின்றன. புழக்கத்தில் இல்லாத தங்கம் குறித்தோ, தனிநபர்கள் வைத்திருக்கும் தங்கம் குறித்தோ அரசாங்கத்திடம் எந்தக்
கணக்கும் இல்லை.எனவே, கணக்கிடப்படாத தங்கத்திற்கான பொது மன்னிப்பு திட்டத்தை,
அரசாங்கத்தால் கொண்டு வர முடியாது.இவ்வாறு அவர்கூறினார்.
இதற்கிடையே, அரசிடம் இது போன்ற எந்த திட்டமும் இல்லை என்றும், பட்ஜெட் நெருங்கும் வேளையில், இது போன்ற செய்திகள் வருவது வாடிக்கையான ஒன்று தான் என்றும் தகவல்கள்
வருகின்றன.


24 ஆயிரம் டன்


நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் மத அமைப்புகளில் சுமார், 23 ஆயிரம் முதல், 24 ஆயிரம் டன் தங்கம் பயன்படுத்தப்படாமல் இருப்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய குடும்பங்களின் சேமிப்பில் சுமார், 11 சதவீதம் தங்கத்தில் இருப்பதாக, பல்வேறு ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.மேலும் ஓராண்டுக்கு சராசரியாக, 900 டன் தங்கம் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...