Thursday, October 31, 2019

இதைத்தாங்க நானும் என் நண்பர்களிடமெல்லாம் புலம்புகிறேன்...

திருச்சி மணப்பாறை அருகே பழைய மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் (போர்வெல்) அந்த நிலத்தின் உரிமையாளரின் 2வயது மகன் அதில்தவறி விழுந்தது அனைவருக்குமே மிகவும் வேதனையான விஷயம் மிகவும் வருத்தமாக இருக்கிறது...
ஆனால் இந்த தவறு ஆண்டு தோறும் ஏதாவது ஒரு இடத்தில் நடக்கிறது..இது அப்போது மட்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.. மீண்டும் மறந்து விடுகிறோம்...பிறகு இந்த மாதிரி சம்பவம் மீண்டும் எங்கும் நடக்காமல் இருக்க பொதுமக்கள் முயற்சி கூட செய்வதில்லை.அவ்வளவு அலட்சியம்...
இதில் பிரச்சினை எங்கே ஆரம்பமாகிறது என்றால்?ஆழ்துளை கிணறு அமைத்து அதில் தண்ணீர் வரவில்லை என்றால் உடனே போர்வெல் லாரி உரிமையாளர்கள் சுமார் 20அடி PVC பைப் விலையாக ரூபாய் 8000முதல் 10000வரை கேட்கிறார்கள்... தண்ணீர் கிடைக்காத நிலையில் அந்த விரக்தியில் அந்த நிலத்தின் உரிமையாளர் சரி PVC பைப் எனக்கு வேண்டாம் அதை எடுத்து விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்..பிறகு அந்த PVCபைப் எடுத்த பிறகு அந்த ஆழ்துளை கிணற்றின் அகலம் சுமார் 1 அடி அளவிற்கு இருக்கும்.. அதில் தான் சிறு வயது குழந்தைகள் சுலபமாக உள்ளே விழுந்து விடுகிறார்கள்.‌இதற்கு காரணம் லேசான அங்கு இருக்கும் மண்ணை தள்ளி மூடிவிட்டு அந்த நிலத்தின் உரிமையாளர் போய்விடுவதே இந்த ஆபத்துக்கான காரணமே தவிர வேறு ஏதுமில்லை..
இதில் அரசை குறை சொல்ல முடியாது.
அனைத்து விஷயங்களையும் அரசே செய்ய முடியாது.....
எனவே அனைவரும் பொறுப்புணர்வுடன்...
விவசாய நிலத்தில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் போர்வெல் போட்ட பிறகு தண்ணீர் வரவில்லை என்று அந்த PVC பைப் ஐ எடுத்த பிறகு அலட்சியம் செய்யாமல் உடனே அதை ஒரு டிராக்டர் மண் கொண்டு கல் மண்ணை கொண்டு அந்த போர்வெல் ஐ சுத்தமான மூடிவிட்டு அந்த இடத்தை சிறிது காலம் மழை நீர் தேங்கும் அளவுக்கு வழி செய்துவிட்டால் இந்த மாதிரி சோக சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்....
இது பொதுநலம் கருதி வெளியிட்ட பதிவு லைக் ஐ கூட நான் எதிர்பார்க்கவில்லை....தயவு செய்து இதை அனைவரும் வாட்ஸ்அப் முகநூலில் டுவிட்டர் ல் பகிர்ந்து நம்மால் முடிந்த நல்லதை செய்வோம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...