Wednesday, October 30, 2019

தூத்துகுடி ஓகா ரயில் நிறுத்தப்பட்டதாமே...

இனி திருவாரூர் மாவட்ட மக்கள் குஜராத் செல்வது எளிது.
குஜராத்தில் உள்ள பல நகரங்களுக்கு வேகமாக சென்று திரும்ப, திருவாரூர் மாவட்ட மக்கள் மன்னார்குடி அல்லது நீடாமங்கலம் சென்று,
.
16615 / மன்னார்குடி - கோயம்புத்தூர் செம்மொழி விரைவு ரயில் மூலம் கரூர் சென்றால்:
.
பிரதி வாரம் திங்கட்கிழமை கரூரில்
19567 / தூத்துக்குடி - ஓக்கா விரைவு ரயிலை அதிகாலை 03:25 மணிக்கு பிடித்து,
.
1. சேலம்
2. கிருஷ்ணராஜபுரம் (கே.ஆர்.புரம், பெங்களூரூ.)
3. தர்மவரம் (புட்டபர்த்தி)
4. அனந்தபுரம்
5. குண்டக்கல்
6. மந்த்ராலயம் சாலை (ராகவேந்திரர் கோயில்)
6. ராய்ச்சூர்
7. குல்பர்கா
8. சோலாப்பூர்
9. புனே
10. லோனாவாலா
11. வசாய் சாலை (மும்பை)
12. சூரத்
13. வடோதரா
14. அகமதாபாத் (சபர்மதி ஆசிரமம்)
15. ராஜ்கோட்
16. ஜாம்நகர்
17. துவாரகை (மிகவும் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில்)
.
ஆகிய நகரங்களுக்கு செல்ல எளிமையாக இருக்கும்.
.
மறுமார்கத்தில், மேற்கண்ட நகரங்களிலிருந்து திருவாரூர் மாவட்டம் வந்தடைய,
19568 / ஓக்கா - தூத்துக்குடி விரைவு ரயிலில் ஞாயிறு அதிகாலை 01:00 மணிக்கு கரூர் வந்து,
16616 / கோயம்புத்தூர் - மன்னார்குடி செம்மொழி விரைவு ரயிலை கரூரில் அதிகாலை 03:00 மணியளவில் பிடித்தால் காலை 06:45 மணியளவில் நீடாமங்கலம் வந்தடையலாம்.
.
கரூரில் மாறி ஏறினால் போதும்.
.
பின்குறிப்பு :
1. இந்த ரயில் மும்பை மற்றும் குஜராத் செல்ல தமிழகத்திலிருந்து மிக வேகமான ஒரு ரயில் ஆகும். ஆகையால் பயண நேரம் குறைவு.
.
2. அது மட்டுமன்று 19567 மற்றும் 19568 ரயிலில் பயணச்சீட்டு சற்று எளிதாகவே கிடைக்கும்.
.
3. சென்னை சென்று செல்வதை விட பயண நேரம் மிக குறைவு.
.
இந்த தொடர்பை பயன்படுத்தி பெங்களூர், சோலாப்பூர், புனே, மும்பை, சூரத், அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு தொழில் ரீதியாக செல்ல,
.
மற்றும் மந்த்ராலயம், ஷீரடி(புனே), மகாபலேஷ்வர்(புனே), துவாரகை ஆகிய நகரங்களுக்கு புனித யாத்திரை செல்ல பேருதவியாக இருக்கும்.
.
ஆகையால், திருவாருர் மாவட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தி பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...