Monday, October 21, 2019

எமர்ஜென்சியை எதிர்த்ததால் தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதா??

வரலாற்றை திரும்பி பார்ப்போம்.
1970களில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிகிறது. காமராஜர் தலைமையில் ஒன்றும், இந்திரா காந்தி தலைமையில் மற்றொன்றும்.
1971 பாராளுமன்ற தேர்தல். தமிழகத்தில் திமுக இந்திரா காங்கிரஸ் ஒரு அணி. காமராஜர் எதிரணி.
இதில் எம்.ஜி.ஆர். எனும் மந்திர சொல்லை பயன்படுத்தி காமராஜர் அணியை வீழ்த்தி 38 தொகுதிகளில் ஜெயிக்கிறது திமுகவும் இந்திரா காங்கிரசும்.
மிசா சட்டம் கொண்டுவரப்பட்டது 1971.
1971 பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் முரசொலி மாறன், சிட்டி பாபு, இரா.செழியன் போன்றோர் பாராளுமன்றத்தில் இருந்தனர்.
எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது - 1975 ஜூன் 25
காமராஜர் மறைந்தது - அக்.2 1975
(காமராஜரும் எமர்ஜென்சியை எதிர்த்தார்தான். ஆனால் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட 4 மாதங்களுக்குள்ளேயே மறைந்தார்.
திமுக ஆட்சி கலைக்கப்பட்டது - ஜன 31 1976.
மிசா சட்டத்தை தமிழகத்தில் முதலில் பயன்படுத்தியது கருணாநிதிதான் பிறகுதான் இந்திரா காந்தி பயன்படுத்தினார்.
மிசா சட்டத்தில் அதிமுகவின் ஜேப்பியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். (14 மாதங்கள்)
தமிழகத்தில் மிசா சட்டத்தில் திமுக ஆட்சியில் கைதான ஒரே அரசியல் பிரமுகர் ஜேப்பியார் மட்டும்தான்.
( அதிமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு எதிர்கொண்ட முதல் தேர்தலான திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வெற்றிக்கு காரணமாக இருந்த தொகுதி பொறுப்பாளர்)
பிறகு திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வருகிறது (பிப் 1 - 1976)
பிப்ரவரி 1க்கு பிறகே கருணாநிதி, வைகோ, மாறன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் மிசா சட்டத்தில் இந்திரா காந்தியால் கைது செய்யப்படுகிறார்கள்.
மார்ச் 21, 1977வரை எமர்ஜென்சி நீடிக்கிறது. அதுவரைக்கும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிதான்.
எமர்ஜென்சி நீக்கப்பட்ட பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 1977 ஜூன் மாதம்தான் முதன்முதலாக அதிமுக ஆட்சியை பிடிக்கிறது. எம்.ஜி.ஆர் முதல்வரானார்.
மிசா காலத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் கைதுகள் திமுக மற்றும் காங்கிரஸ் அரசால் செய்யப்பட்டவை.
கொசுறு தகவல் - 1971 மார்ச்சில் வந்த திமுக ஆட்சி ஏறக்குறைய முடியும் நிலையில் இருந்தது. ஆட்சிக்காலம் வெறும் 2 மாதங்களுக்கும் குறைவாக இருக்கும்போதுதான் கலைக்கப்பட்டது. இந்திரா காந்தி திமுக ஆட்சியை கலைக்காவிட்டாலும் 2 மாதங்களில் 5 ஆண்டு கால ஆட்சி முடிந்திருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...