Tuesday, October 22, 2019

#தினகரன்_தனி_ஆவர்த்தனம்...???

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
“ஒரு குடும்பத்தால் அழித்தொழிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் காலத்தில் அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்து வந்தது.
அதைக் கடந்த சில ஆண்டுகளாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார். அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் விரட்டி அடிக்கப்பட்ட நிலையில், சசிகலா தினகரன் தரப்புக்கு ஆதரவாக ஜெயா டிவி செயல்பட்டு வந்தது.
இதனால் அந்த நேரத்தில், ‘ஜெயா டிவியையும், நமது எம்.ஜி.ஆரையும் சட்டபூர்வமாக மீட்டெடுப்போம்’ என அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஜெயா தொலைக்காட்சி தனியார் சொத்து. முடிந்தால் அதை கைப்பற்றிப் பாருங்கள் என்று தினகரன் சவால் விடுத்தார். இந்த முயற்சி கைகொடுக்காமல் போகவே அதிமுகவுக்கென தனியாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.
ஆனால் தற்சமயம் தினகரனுக்கும் சசிகலா வுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தினகரன் தரப்பு செய்திகளை ஜெயா டிவி ஒளிபரப்பு செய்வதில்லை.
இந்த நிலையில் அமமுகவுக்கென தனி செய்தி சேனலை வாங்கும் முடிவில் இருக்கிறார் தினகரன்.
தினகரன் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை மையப்படுத்தும் செய்திகளைப் பெரிய அளவில் ஒளிபரப்பிவந்த ஜெயா டிவி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதுசார்ந்த செய்திகளைப் பெரிய அளவில் ஒளிபரப்பவில்லை. ஜெயா டிவி மீட்டிங்குகளில் விவேக் பேசும்போது, ‘தமிழ்நாடு அரசு, மத்திய அரசு சார்ந்த செய்திகளுக்கெல்லாம் நாம எதிரி இல்லை. அந்த செய்திகளை எல்லாம் ஒளிபரப்புங்க. நாம யாருக்கும் ஆதரவு யாருக்கும் எதிர்ப்புன்னு வலிய காட்டிக்க வேணாம். திமுக செய்தியா இருந்தாகூட மக்கள் பிரச்சினையா இருந்தா காட்டுங்க’ என்று அறிவுரை கூறியிருக்கிறார். அந்த வகையில் துரைமுருகன் பேட்டியும்கூட ஜெயா டிவியில் வந்தது.
இதையெல்லாம் சசிகலாவைச் சிறையில் சந்திக்கச் செல்லும்போது தினகரனும், அவரது மனைவி அனுராதாவும், ‘அமமுக நிகழ்ச்சிகளுக்கு ஜெயா டிவியில் விவேக் முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று பலமுறை புகார் கூறினர்.
ஆனால், சசிகலாவோ இதுகுறித்து பெரிதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தினகரன், தற்போது தனியாக செய்தி சேனல் வாங்கும் முடிவுக்கே வந்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு, மூடப்படும் நிலையில் உள்ள நதியின் பெயர் கொண்ட ( காவேரி நியூஸ்) செய்தி சேனலை அமமுகவுக்கு வாங்குவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவருகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அந்த சேனலில் முழுக்க முழுக்க தினகரனை மையப்படுத்தி செய்திகளும், நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பத் தயாராகி வருகின்றன. இப்போதே அதிமுகவின் 48ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி தினகரன் எழுதிய மடலை, அப்படியே வீடியோவாக்கி அமமுகவின் ஐடி விங் வெளியிட்டிருக்கிறது. இதுபோன்ற தினகரனை மையப்படுத்திய பல நிகழ்ச்சிகள் புதிய டிவியில் ஒளிபரப்பாகும்.
இன்னொரு முக்கியமான விஷயம் புதிய டிவி ஆரம்பிப்பதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. புதிய சேனலுக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வரை க்ளியரன்ஸ் வாங்க வேண்டும். அப்படியென்றால் இதற்கு மத்திய அரசின் அனுமதியும் ஆதரவும் தேவை. ஏற்கனவே ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சேனல் என்றாலும் அது தினகரனின் கைவசம் மாறுவதாக இருந்தால், மத்திய அரசு நினைத்தால் சில சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் அல்லது எளிதாக்கவும் முடியும்.
தினகரனின் இந்த முயற்சி குறித்து அறிந்த விவேக், சிறையில் உள்ள சசிகலாவிடம் இதுபற்றி சொல்லியுள்ளார். தனிக்கட்சிக்கே எதிர்ப்பு தெரிவித்த சசிகலா, தனி சேனலுக்கும் எதிர்ப்பாகத்தான் இருக்கிறார். இதற்கிடையே விவேக் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் தினகரன் டிவி சேனல் தொடங்கும் விவகாரத்தை சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறார்.
‘அத்தையையும் (சசிகலா), அம்மாவையும் (இளவரசி) வெளியில் கொண்டுவருவதற்கு, நான் டெல்லி தரப்பில் பலரிடமும் பல வழிகளில் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். அந்த முயற்சிகளுக்கும் தற்போது பலன் கிடைக்கும் தருணம் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் தினகரன் தனது கட்சிக்காக தனி டிவி சேனல் வாங்கத் துடிக்கிறார்’ என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், ‘நாங்கள் ஏற்கனவே நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தோம். அம்மா இளவரசி பரோலில் வந்தபோது ஜோதிடம் பார்த்தார். ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, உடனடியாக அந்த வீட்டை காலி செய்யச் சொல்லிவிட்டு சிறைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு லீலா பேலஸ் அருகில் உள்ள எம்.ஆர்.சி நகருக்கு குடிவந்துள்ளோம். இங்கே வந்த பிறகுதான் நினைத்த காரியங்கள் கைகூடிவருகிறது. அம்மாவும் அத்தையும் விரைவில் வெளியில் வருவார்கள். தை பொங்கலை அவர்களுடன்தான் கொண்டாடுவோம்’ என நம்பிக்கையாகக் கூறியிருக்கிறார் விவேக், அதேநேரம் தினகரனோ தனி சேனலுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாகியிருக்கிறார்”
“ஏற்கனவே கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால்தான் சன் டிவியில் இருந்து திமுக தன்னை விடுவித்துக்கொண்டு கலைஞர் டிவி உருவாக்கப்பட்டது. இப்போது சசிகலா குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் தனி சேனலா?” என்ற கேள்வியை அம்முவின் அப்பாவி தொண்டர்கள் ஆதங்கப் படுகிறார்கள்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...