Wednesday, October 30, 2019

நெஜமாத்தான் சொல்றியா?

ஒரு மகானிடம் சிஷ்யர் கேட்டார் .
பொது கழிப்பறைகளில் அல்லது பொது இடங்களில் சிலர் கேவலமாக கிறுக்கி வைக்கிறார்களே ஏன் என கேட்டார் .
அந்த மகான் அங்குள்ள அனைத்து சீடர்களுக்கும் சாக்லேட் கொடுத்து சாப்பிடுங்கள் என கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார் .
சிறிது நேரம் கழித்து ஆசிரமதிற்குள் நுழைந்த மகான் கேள்விகேட்டு சீடரை அழைத்தார் .
நான் செல்லும்போது அனைவர்களிடமும் சாக்லேட் கொடுத்தேன் அதை சாப்பிட்டார்கள் .
சாக்லேட் பேப்பர்கள் எங்கே என்று கேட்டார் .
சீடன் வகுப்பறையை சுற்றிலும் பார்த்தார் . அங்கே அணைத்து மாணவர்களின் இருக்கைகளுக்கு கீழே சாக்லேட் பேப்பர் இருந்தது .
குருவே எல்லோரும் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு அவரவர்களின் இருக்கைகளுக்கு கீழே சாக்லேட் கவரை போட்டு வைத்திருக்கிறார்கள் என்றார் .
குரு கூறினார் .
இது அவரவர்கள் சாப்பிட்ட சாக்லேட்டின் கவர் அல்ல .
ஒவ்வொருவரும் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு தன் இருக்கைக்கு கீழ் சாக்லேட் கவரை போட்டுவிட்டால் மாட்டிக்கொள்வோம் என்று பிறரின் இருக்கைக்கு கீழே கவரை போட்டுவிட்டார்கள் என்றார் .
சரி நீ சாப்பிட்ட சாக்லேட் கவர் எங்கே என்றார் .
அந்த மாணவன் இதோ என்னுடைய பையில் எடுத்து வைத்திருக்கிறேன் வெளியே சென்றதும் போட்டு விடுவேன் என்றார் .
குரு கூறினார் .
இப்படித்தான் மனிதர்கள் தன் மன அழுக்கை வெளிப்படுத்த ஏதோ ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் . தன் வீட்டு பாத்ரூமில் எழுதினால் மாட்டிக்கொள்வோம் என்று பொது இடங்களில் தன் மன வக்கிரங்களை வெளிப்படுத்தி விடுகிறார்கள் .
உன்னைப்போன்ற ஒரு சிலர் மட்டுமே குப்பைகளை எங்கே கொட்ட வேண்டுமோ அங்கே கொட்டுகிறார்கள் என கூறினார் .
முகநூலையும் சிலர் பொது கழிப்பிடங்களை போலத்தான் பயன்படுத்துகிறார்கள் .
சிலரின் போஸ்ட்கள், சிலரின் கமண்ட்ஸ்களை பார்க்கும்போது மனதில் எவ்வளவு வக்கிரங்கள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது .
ஒருவன் இன்னொருவவனை திட்டுவதற்கு குர்ஆன் வசனங்களை பயன்படுத்துவது , நபி மொழிகளை பயன்படுத்துவது போன்ற கேவலங்களும் நடைபெறுகிறது .
ஒருவரை கண்ணியபப்டுத்த வேண்டும் என்ற நினைப்பை விட பிறரை எப்போது கேவலப்படுத்தலாம் என்ற சிந்தனையே மேலோங்கி இருக்கிறது .
இபப்டி அடுத்தவர்களை கிண்டல் செய்து ,கேவலப்படுத்தி fake ஐடியில் எழுதுபவர்களுக்கும் ,பொதுக்கழிப்பிடங்களில் ஏதோ ஒன்றை கிறுக்குபவர்களுக்கும் மத்தியில் பெரும் வித்தியாசம் இல்லைதானே ???......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...