Wednesday, October 23, 2019

Jaihind ... Jaihind... Jaihind.

முன்பு எல்லாம் பாக்கிகள் தீவிரவாதத்துக்கு ஆதாரம் தருகிறோம் நடவடிக்கை எடுங்கள் என நாம சொல்லிட்டு இருப்போம். அந்த தீவிரவாத நாடும் ஆகட்டும் பார்க்கலாம் என சீன் போடும்.
இப்போ அப்படியே தலைகீழ். பாக்கிகள் தீவிரவாத முகாமுக்கு ஆதாரம் கொடுங்க நாங்க அவிங்களை புடிச்சிடுறோம் என கேட்டதோட நிக்காம பாக்கிகளின் கையிலே இருக்கும் காஷ்மீர் எல்லைக்கு நம்ம தூதுவரையும் கூப்பிட்டு இருக்காங்க.
கூடவே வெளிநாட்டு தூதுவர்களையும் கூட்டிட்டு போறோம் என கூட்டிட்டு போயிருக்குதுக.
நமது தூதரகமோ இங்கேயோ யாருமே கண்டுக்கல.
தீவிரவாத முகாம தாக்கி அழிச்சது வீடியோ இருக்கு வேணுமின்னா பாத்துக்கோன்னு சொல்லி விட்டுட்டாங்க.
தாக்கப்பட்ட நீலம் பள்ளத்தாக்கு மிக முக்கியமான இடம். பாக்கிகளுக்கு சுற்றுலா வருமானத்தை ஈட்டிதரவல்லது. அதே நேரத்திலே நம்முடைய எல்லையிலே இருந்து தாக்குவதற்கும் வசதியானது.
பாக்கிக்கு சுற்றுலா வாருங்கள் என பல கோடி ரூபாய் செலவு பண்ணி இங்கிலாந்து அரச குடும்பத்தை கூட்டிட்டு வந்து ஷோ காமிச்சா
நம்மோட ராணுவம் இது தானா டக்குன்னு சில ஆயிரம் ரூவால்ல சோலிய முடிச்சிருச்சு.
பாக்கிச்ச்ஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பவில்லை தீவிரவாதம் செய்யவில்லை தீவிரவாதத்துக்கு துணை போகவில்லை என கிடந்து புலம்புதுக.
வாங்கின அடி அப்படி.
மோடி அரசு இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை. முன்னாடி கொடுத்த ஆதாரம் எல்லாம் சேதாரம் ஆயிடுச்சுன்னு சொல்லிவிட்டுட்டார்.
இருந்தாலும் அவிங்களே கேக்குறப்போ நாம கொடுக்கறது முறைதானேன்னு கேக்கலாம். அப்படி நம்பித்தான் வாஜ்பாய் காலத்திலே பாராளுமன்ற தாக்குதலுக்கு ஆதாரம் கொடுத்தாங்க.
பாக்கிகள் அந்த ஆதாரத்தை பார்த்துட்டு அது எப்படி கசிந்திருக்கும் என கண்டுபிடிச்சு அதை கொடுத்த அங்கிருந்த நம்மோட உளவாளிகளை போட்டு தள்ளிட்டாங்க.
இப்படியே தான் போயிட்டு இருந்தது. ஏன் பதான்கோட் தீவிரவாத தாக்குதலிலேயும் பதான்கோட் தளத்துக்கே பாக்கிஸ்தான் ஆட்களை வரவைச்சு பார்க்க சொன்னது மோடி அரசு. ஆனா அவிங்க திரும்ப நம்ம ஆட்களை அங்கே விடல.
சரி வாய்ப்பு கொடுத்தது போதும். இவுனுக கிட்டே வாயிலே பேசினா சரிவராது. துப்பாக்கியால் பேசினால் தான் சரிவரும் என மோடி அரசு முடிவு எடுத்து இன்றைக்கு வரைக்கும் அதிலே உறுதியாக நிற்கிறது.
போட்டு தள்ளியாச்சு. அதுக்கான ஆதாரம் எல்லாம் பொணமா கெடக்குது போயி பார்த்துக்கோன்னு சொல்லியாச்சு.
இதுவரைக்கும் எந்த உலகநாடும் ஏன் தாக்குதல் நடத்தினாய் தாக்குதல் நடத்தியது தவறு என்றோ
எல்லைக்கோட்டை மீறிவது தவறு என்றோ சொல்லவில்லை.
காஷ்மீரிலே ஆப்பிள் மாபியா முழுக்க ஒழிக்கப்பட்டு விட்டது. காஷ்மீரத்து ஆப்பிள் இப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அரசே ஆப்பிள்களை கொள்முதல் செய்து கொள்கிறது.
உள்ளே தீவிரவாதிகள் அனுப்பினால் போட்டுதள்ளுகீறது நமது ராணுவம். போஸ்ட் பெய்டு இணைப்புகளை அனுமதித்தும் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. கூடிய சீக்கிரம் ப்ரீ பெய்டு மற்றும் இணைய சேவைகள் தொடரும்.
இன்னும் 7 நாட்களிலே காஷ்மீரம் யூனியன் பிரதேசம் ஆகிவிடும். புது அமைப்பு உருவாகிவிடும்.
சர்தார் படேல் உதித்த தினத்தன்று அது நடக்கும். தொடர்ந்த தீவிரவாத செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்ப்டும்.
Image may contain: 1 person, standing, walking and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...