Tuesday, October 29, 2019

சிறுவன் சுர்ஜித்தும் சீனா பொய்களும்...

-------------------------------------
எப்படி நாட்டை கேவலப்படுத்தாலாம் என காத்திருக்கிறது ஒரு கும்பல்... குழந்தை சுர்ஜித்துக்காக பரிதாபப்படுகிறேன் என்ற பெயரில் நாட்டின் விஞ்ஞானத்தையும்.. நிர்வாகத்தையும் இழிவு செய்து தன் அரிப்பை சொரிந்து சொரிந்து சுகம் காண்கிறது அக்கும்பல்.. சீனாவில் ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் அரைமணி நேரத்தில் மீட்கப்பட்ட அற்புதத்தை பார்... என கம்யூனிஸ்ட் ஊடகவியலாளர்களுடன் இணைந்து நம் நாட்டின் அறியாமையை கண்டு வெட்கப்படுவதாக கூறி உள்ளுக்குள் ஆனந்த கூத்தாடும் அக்கும்பலில் பாரளுமன்ற உறுப்பினர்கள் வரை இருப்பது நம் நாட்டின் சாபக்கேடு...
சரி சீனாவில் 2016-ம் ஆண்டு ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் அரை மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக சொல்வதின் உண்மை என்ன?
1) சீனாவில் விழுந்த சிறுவன் வயது 5/ பள்ளி செல்லும் சிறுவன்/ ஆனால் திருச்சி பாலகன் வயதோ-2
2) சீனாவில் சிறுவன் விழுந்த ஆழ்துழாய் கிணறு ஒரு தீயணைப்பு படை வீரர் சுவாச கருவிகளுடன் உள்ளே இறங்கும் அளவு பெரிது... திருச்சி கிணறு குறுகியது/ மண் ஈறப்பதமிக்க விவசாய நிலம்
3)சீனாவில் இது போன்ற சம்பவங்களை நேரலையாக ஒளிபரப்பி வணிகம் செய்ய எந்த தனியார் தொலைகாட்சியும் இல்லை/ அரசுக்கு சொந்தமான ஒரே டிவி/ ஒரே நாளிதழ் உண்டு/ அதில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டால் மட்டுமே செய்தி வரும்/ இல்லை என்றால் மூடாத ஆழ்துழாய் கிணறுகளின் உரிமையாளர்கள் கைது/ சிறை போன்ற செய்திகளே வரும்/
4) அதிமேதாவி போல கருத்து சொல்லவும்... அல்லும் பகலும் அயராது மீட்பு பணியில் இருப்பவர்களை., மூன்று நேரம் மூச்சு முட்ட தின்று விட்டு குறை சொல்லவும் அங்கு பேஸ்புக் வாட்சப் டுவிட்டர் போன்ற எந்த சமூக வலைதளத்திற்கும் அனுமதி இல்லை/ சீனா அரசுக்கு சொந்தமான ஒரே சமூக வலைதளம் உண்டு... அது அரசால் 24மணி நேரமும் கண்காணிக்கப்படும்/ அதில் அரசை குறை சொல்லி பதிவிட்டால் வராது/ பதிவிட்டவர் தேசதுரோகியாக கைது செய்யப்படுவர்
5) நிலக்கரி சுரங்கங்கள்... எரிவாயு கிணறு விபத்துகளில் உலகிலே அதிக உயிரிழப்பு ஏற்படுவது சீனாவில் தான்...
இப்போது சொல்லுங்கள்... சீன பொய்களை பரப்பி நம் நாட்டை நினைத்து வெட்கப்படுகிறேன் எனச்சொல்பவர்களை என்னச் செய்யலாம்? ஒரு 2-வயது சிறுவனின் உயிர் போராட்டத்தை அரசியலாக்கி மத சாதி காழ்ப்புணர்வுகளை கக்கி நாட்டை சிறுமை பேசுபவர்களை என்ன செய்யலாம்? சீனாவில் தான் தனியார் ஊடகங்கள் இல்லையே., அப்படி என்றால் சீன சிந்தனையாளர்களுக்கு எதற்கு தனியார் ஊடகங்களில் வேலை?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...