Thursday, October 31, 2019

பெய்டு மீடியாக்களின் இந்த திட்டமிட்ட வியாபார செயலால்:: “முரசொலியின் பஞ்சமி” நில விஷயம் எல்லோருக்கும் மறந்து போச்சு..!

ஒரு குழந்தையை இழந்ததில், மாநிலம், மொழி, சாதி, சமய வேறுபாடுகள் எல்லாம் கடந்து அத்தனை பேரும் வருத்தப்படுகிறோம்.
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு!
தண்டிக்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பற்ற பெற்றோரின் செயலால் ::
அந்த பெற்றோருக்கு குழந்தை இழப்பு,
அரசுக்கு சில கோடிகள் இழப்பு,
ஆனால், வேசி ஊடகங்களுக்கு மட்டும் விளம்பரங்கள் நிறைந்த நேரடி ஒளிபரப்பு என்ற பெயரால் 5 நாளில் சில ஆயிரம் கோடிகள் லாபம்.
பெய்டு மீடியாக்களின் இந்த திட்டமிட்ட வியாபார செயலால்::
“முரசொலியின் பஞ்சமி” நில விஷயம் எல்லோருக்கும் மறந்து போச்சு..!
”நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்” தோல்வி விஷயம் மறக்கடிக்க பட்டாச்சு!
தீபாவளி, பட்டாசு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் ஓரம் கட்டியாச்சு !
ஒரு குழந்தையை காப்பாற்ற நடந்த உணர்ச்சிகரமான போராட்டத்தை வைத்து, பலவிசயங்களை மறக்கடித்த வேசி ஊடகங்களின் சாமர்த்தியம் புரிந்ததா?
இப்போது, சுஜித் வில்சன் பெற்றோருக்கு நஷ்ட ஈடு & வேலை தர வேண்டும் என்று பொன்ராஜ், (கலாம் இயக்கம்) உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுஜித்தோட அப்பாவுக்கு அரசாங்க வேலை கொடுக்கனுமாம், இழப்பீடு கொடுக்கனுமாம்.
குழந்தையை பாதுகாக்க தவறிய காரணத்திற்காக தண்டனை தான் தர வேண்டுமே தவிர வேலை அல்ல!
இவர் அப்துல் கலாம் அய்யாவுக்கு ஆலோசகராய் இருந்தவர். 😥
இன்று “ வட்ட செயலாளர் வண்டு முருகன்” துணையுடன் முரண்பாடுகளின் மொத்த உருவம் சுடாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, மொத்தம் ரூபாய் 10 லட்சம் கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 5 பண்டல்களை அந்த குடும்பத்திற்கு இழப்பீடாக கொடுத்து விட்டு, அரசின் மீட்பு நடவடிக்கையை வழக்கம் போல் குறை கூறி உளறிக் கொட்டி விட்டர்.
( ₹ 10 லட்சம் பணமாக/நோட்டுகளாக ஒருவருக்கு தர முடியுமா என்பது வேறு விசயம்)
இனி ஒரு வாரத்துக்கு நம் மீடியாக்களுக்கு கொண்டாட்டம் தான்!!
மயில்சாமி, கஸ்தூரி போன்றோர் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
ஆளூர் ஷாநவாஸ் போன்ற விஞ்சாணிகள் சுடலையைப் போலவே, அரசின் நடவடிக்கையில், ஓட்டை மிகப்பெரிதாக இருந்தது என்பார்கள்.
திருமா மணி மண்டபம் கட்டச் சொல்வார்.
வைகோ தீச்சட்டியுடன் நினைவேந்தல் நடத்துவார்.
வேல் முருகன், திருமுருகன் போன்றோர் போலிஸ் வேனில் ஏறி நின்று கழுத்து நரம்பு புடைக்க கத்தி கூச்சலிடுவார்கள்.
பங்குத் தந்தைகள் சுஜித்தின் தாயாருக்கு, சிறுபான்மையினர் கோட்டாவில் சப் கலெக்டர் வேலை வேண்டும் என்று கேட்பார்கள்.
மய்யம் முதலாளி யாருக்கும் புரியாத மொழியில் அறிக்கை விடுவார்.
எந்திரன் மனிதநேயம் பற்றி பேசுவார். சோசப் விசய் ரசிகர் மன்றம், சமாதிக்கு பாக்கெட் பால் அபிஷேகம் செய்யும். உண்டியல் குலுக்கிகள், இனி கையில் உண்டியலுடன் நிதி திரட்ட கிளம்பி விடுவார்கள்.
இதே ஆழ்துளை கிணற்றில் வேறு குழந்தை விழுந்திருந்தால், நில உரிமையாளர் தலைமறைவாகியிருப்பார், போலீஸும் வலைவீசி தேட ஆரம்பித்திருக்கும். ஆனால் நிலைமை வேறாக உள்ளது.
அந்த மரண குழியை மூடாமல் விட்டு வைத்திருந்த, 2 வயது குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளாத பெற்றோர், மீண்டும் இந்த மாதிரியான சம்பவம் நடக்காமலிருக்க, மிகவும் கடுமையாக எச்சரிக்கப்பட / தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு இடமும், மண்ணின் தன்மையும், போர்வெல் அகல அளவும், ஆழமும் இடத்துக்கிடம் மாறுபடும்/வேறுபடும்.
ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தையை காப்பாற்ற, 5 நாட்களாக உழைத்த பலவேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் கண் துஞ்சா உழைப்பை கொச்சைப் படுத்த வேண்டாம். தனி ஒரு குடும்பத்தின் மெத்தனம் நிறைந்த தவறுக்கு, அரசையும் அமைச்சர்களையும் குறை கூறி,
அப்படி செய்திருக்க வேண்டும், இப்படி செய்திருக்க வேண்டும் என்று ஆளாளுக்கு அறிவுரை கூற வேண்டாம்.
குறையை மட்டுமே பூதக்கண்ணாடி போட்டு பார்த்து ஒவ்வொன்றையும் அரசியலாக்கும் அவலம் நிறைந்த சமூகம் இது!
கிட்னி ஆப்ரேஷன் செய்தும் களத்தில் வந்து அமர்ந்திருந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்,
தீபாவளி நாள் என்றும் பாராமல் குடும்பத்துடன் இருக்க நினைக்காமல் நான்கு நாட்களும் இடத்தை விட்டு நகராத அமைச்சர் பெருமக்கள்,
கொட்டும் மழையிலும் பணியை ஒருங்கிணைத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், போலிஸ் அதிகாரிகள்,
மயங்கி விழும் அளவிற்கு தொடர்ந்து பணியாற்றிய வீரர்கள்,
இவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை !
சரியாக விவரம் தெரியாமல், நிலாவுக்கு ராக்கெட் விட டெக்னாலஜி இருக்கு, குழந்தையை மீட்க இல்லையா? என்று பதிவிடுவது தவறு.
Heartஐ எளிதாக மாற்ற முடிந்த நமக்கு, வழுக்கையில் முடி வளர வைக்க முடியவில்லை. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், அரசு மட்டும் என்ன செய்ய இயலும் ?
ஆலோசனை யார் வேண்டுமானலும் கூறலாம், ஆனால் அந்த இடத்தில் அது சாத்தியம் தானா என்று பார்க்க வேண்டும்.
ஒத்த கருத்துள்ளவர்கள் இங்கு விவாதிக்கலாம்!
வானத்தை வளைத்திருக்கலாம்,
மணலை கயிறாக திரித்திருக்கலாம், பூமியை புரட்டு போட்டிருக்கலாம் என்று எனக்கு அறிவுரை கூற விரும்புபவர்கள் தயவு செய்து இங்கே மூக்கை நுழைக்க வேண்டாம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...