Thursday, April 16, 2020

உலக பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக‌ இருக்கும் இந்த பெண்மணி நமக்கு மாநில அலுவலராக கிடைத்துள்ளமைக்கு நாம் பெருமை கொள்வோம்.

திருமதி. பீலா ராஜேஷ்...(Beela Rajesh) திரையில் அவர் முகம் தெரிய ஆரம்பிக்கும் போதே அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஊன்றி கவனிக்க வைத்தவர். பலர் அவரது ஆடையை சிலாகித்தனர். சிலர் அதே ஆடையை வைத்து..."பெரிய நயன்தாரா என்ற நினைப்பு" 😡 என்று பரிகசித்தவர் சிலர். இதற்கான விளக்கத்துக்கு நான் பதிவின் கடைசியில் வருகிறேன். நான் அவரிடம் ரசித்தது அவர் தகவல்களை வெளியிடும் அழகை...அவர் பேசும் போது அவர் முகத்தை...சிறிதும் குரல் தடுமாற்றம் இன்றி, தெளிவான விளக்கம். எப்படி முறைப்படுத்தியிருக்கிறோம் அவர் விளக்கும் விதத்தை...அதுவே ஒரு வித்தைங்க..!!!
இப்ப விஷயம்...மேட்டுப்பாளையத்தில் ஒரு சிறுமி, அவரால் கவரப்பட்டு, அவரைப் போலவே புடவை, ஜாக்கெட் அணிந்து , கையில் பேப்பரை பற்றிக் கொண்டு வாசிக்கிறாள். இப்ப...அவள் மனதில், நாளை நாமும் இவரைப் போல்..திருமதி.பீலா ராஜேஷ் அவர்களைப் போல, சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றி பெற்று...ஒரு மாவட்ட ஆட்சியாளராக, உயர் போலீஸ் அதிகாரியாக, அயல்நாடுகளில் இந்திய தூதுவராக...இப்படி ஒரு குறிக்கோள் மனதில் ஒரு மூலையிலாவது எழாமல் இருந்திருக்காது.
மருத்துவ கல்வி பயின்று, மருத்துவராகி காவல்துறை உயரதிகாரியாக பணிபுரிந்தவரை திருமணம் செய்த பின்னர், UPSC தேர்வை தன் கணவரைப் போல எழுத வேண்டும் என்று தேர்வுக்கு தயாராகி...! இங்கு ஒன்று கவனிக்கனும். அந்த கால கட்டத்தில் இன்றைக்கு நகர்ப்புறங்களில் முளைத்து கட்டணங்கள் வாங்கி குவிக்கும் பயிற்சி மையங்கள் அன்று கிடையாது...
அன்றாட செய்தித் தாளில் இருந்து...பல புத்தகங்கள் வரை... சமூகம் சார்ந்த, பிற நாடுகள் சார்ந்த, தகவல்கள், current affairs, அரசியல் வரலாறுகள் இன்னும் என்னென்ன...அத்தனையும் எழுத விரல் நுனியில் இருக்க வேண்டும். அதற்கு தங்களை தயார் செய்து தெளிவதே ஒரு தவமாய் இருந்த காலகட்டம் அது. இன்னிக்கு...அதுவும் திருமணத்துக்கு பின்னர் தேர்வுக்கு தயார் செய்து இரண்டு நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற்று...இன்று ஒரு உயர் நிலையில் இருக்கும் ஒரு மரியாதையான பெண்மணிக்கு... இந்த ஆண் சமூகம் வைக்கும் விமர்சனம்...."பெரிய நயன்தாரா என்ற நினைப்பு"
இது கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக ,இங்கு பார்த்ததில் இருந்து இந்த விடயம் என் மனதை அரித்துக் கொண்டிருந்தது...கொண்டிருப்பது நிஜம். எங்கே...ஒரே ஒரு போட்டி தேர்வு எழுதட்டும். சிவில் சர்வீஸ் தேர்வு வேண்டாம். மாநில அளவில் மட்டும் நடக்கும் ஒரே ஒரு போட்டி தேர்வு எழுதட்டும். அட...அது வேண்டாங்க. அரியர் இல்லாமல் கல்லூரி படிப்பை கடந்திருப்பாங்களா இப்படி சிந்திப்பவர்..?பிறகு பேசுவதற்கு வார்த்தை வராது இந்த பெண்மணியை பார்த்து.
பெண்ணின் உயர்வைப் பார்த்து பிரமித்து பாராட்டும் ஆண்களும் இருக்கும் இந்த சமுதாயத்தில் தான் இப்படி புல்லுருவிகளும் இருக்கின்றன.

Image may contain: 1 person, sitting, selfie and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...