Thursday, April 16, 2020

கொள்ளு சுண்டல்.


கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொள்ளுப் பயறை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை நன்றாக வேகவைக்கவும். மிக்ஸியில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் இவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் கொள்ளைச் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
கொள்ளுப் பயறு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அதில் சூப் செய்து சாப்பிடலாம். மூன்று டம்ளர் தண்ணீருக்கு 5 பூண்டு பற்கள் தட்டிப்போடவும். சிறிதளவு மிளகு, சீரகத்தைப் பொடித்துச் சேர்க்கவும். 1 சிட்டிகை மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும். புளிப்புச் சுவை விரும்புகிறவர்கள் சிறிதளவு புளி அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...