இறைவனிடம் விண்ணப்பம் ( வேண்டுதல் ) வைப்பது என்பது நம் தேவையை இறைவனிடம் அறிவிக்கிறோம் என்று வைத்துகொள்வோம் !! அப்போது நாம் தெரிவிக்காது இறைவன் நம் தேவையை தெரியாதா ?? - ஓர் தம்பியின் கேள்வி
இங்கே இறைவன் என்பது ஏதோவொரு உருவில் !! ஏதோவொரு கோயிலில் !! ஏதோவொரு நேரத்தில் மட்டுமே தரிசிக்கக்கூடிய ஒன்றாக ( பலவாகவும் ) பாவித்து !!
அங்கே சென்று அந்த நாள் ? அந்த நேரத்தில் ? உங்கள் தேவையை சொல்லி !! அந்த தேவையை முடித்துக்கொடுத்தால் இதை செய்கிறேன் என்று தரகு பேசி ??
அதன் பிறகு
நடந்தால் ?? சொன்னதை செய்து !!
நடக்கவிட்டால் ?? வேறு ஒன்றை நாடி பயணிப்பது அல்ல !!??
நடந்தால் ?? சொன்னதை செய்து !!
நடக்கவிட்டால் ?? வேறு ஒன்றை நாடி பயணிப்பது அல்ல !!??
நீங்கள்
வேண்டி பெற்றதை விட !!
வேண்டாது பெற்றதே அதிகம் ??
வேண்டி பெற்றதை விட !!
வேண்டாது பெற்றதே அதிகம் ??
அதிலும்
வேண்டி பெற்றது எல்லாம் துன்பத்தை தர ??
வேண்டாது பெற்றதே அதையெல்லாம் சமாளித்து, கடந்து செல்ல உதவிக்கொண்டே இருக்கிறது !!
வேண்டி பெற்றது எல்லாம் துன்பத்தை தர ??
வேண்டாது பெற்றதே அதையெல்லாம் சமாளித்து, கடந்து செல்ல உதவிக்கொண்டே இருக்கிறது !!
என்பதையும் கொண்டு கவனித்து பார்த்தால் தானே புரியும் !!
வேண்டித்தான் கிடைக்கும் என்று ஏதுமில்லை !!
வேண்டாதே கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது !!
வேண்டாதே கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது !!
என்ன
பிறருக்கு கிடைப்பது போலவே நமக்கும் வேண்டும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும், நமக்கு தேவையில்லாதை கூட தேவையாக காட்டி, நம்மை நாமே விரும்பி சிக்கிக்கொள்ள நாமே தேடும் வழியே இந்த வேண்டுதல் !!
பிறருக்கு கிடைப்பது போலவே நமக்கும் வேண்டும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும், நமக்கு தேவையில்லாதை கூட தேவையாக காட்டி, நம்மை நாமே விரும்பி சிக்கிக்கொள்ள நாமே தேடும் வழியே இந்த வேண்டுதல் !!
ஆனால்
நாம் பயணித்த வழி, வாழும் சூழல், குடும்பத்தின் எதிர்பார்ப்பு போன்றவை நம்மை வேண்டும்படி வைத்து விடுகிறது என்பது கூட உண்மையே !!
நாம் பயணித்த வழி, வாழும் சூழல், குடும்பத்தின் எதிர்பார்ப்பு போன்றவை நம்மை வேண்டும்படி வைத்து விடுகிறது என்பது கூட உண்மையே !!
அப்போது வேண்டுதால் என்பது !!
தேவையை தெரிவிப்பது என்பதே,
அந்த தெரிவிப்புக்கு கூட உங்களுள் கலந்து இருந்து இறைவன் ஒத்துழைக்க வில்லை என்றால் உங்களால் வேண்டக்கூட முடியாது என்பதும் மெய்யே !!
தேவையை தெரிவிப்பது என்பதே,
அந்த தெரிவிப்புக்கு கூட உங்களுள் கலந்து இருந்து இறைவன் ஒத்துழைக்க வில்லை என்றால் உங்களால் வேண்டக்கூட முடியாது என்பதும் மெய்யே !!
அப்போது இறைவன் என்ற ஒன்றே எங்கும் நீக்கமற நிறைந்தும், கலந்தும் இருக்கிறது என்ற மெய்யை தீர்க்கமாய் அனுபவித்து இருக்க !!
உங்களுள் ஆழமாக தோன்றும் எண்ணம் எல்லாமே நீங்கள் அறிந்தும் அறியாதும் இறைவனிடம் விண்ணப்பமாகி, அது பிரபஞ்சமாகிய பேரருட் கருணையால், நீங்கள் கேட்க்காதே காரியமாகி கொண்டே இருக்கும் !!
அதை தனியாக வேண்டி ?? தரகு பேசி ?? கமிஷன் கொடுத்து ?? காரியம் ஆற்றவேண்டும் என்ற அவசியமே இல்லை !!
இருந்தாலும் வேண்டுவது மட்டுமா நடக்கிறது என்று கவனித்து பார்த்தால், நாம் வேண்டுவதில் இருக்கும் குறைகள் கூட கலைந்தே அருளப்படுகிறது என்ற நிதர்சனத்தை உணரலாம் !!
மொத்தத்தில் வேண்டுதல் ( விண்ணப்பம் ) என்பது
நீங்கள் குறையா நினைத்து,
சுமந்துகொண்டு இருப்பதாக கருதுவதை,
கொட்ட ஓர் இடம் வேண்டும்,
அது இறைவன் திருவடி என்று எங்கு கொட்டினாலும்,
உங்களுள் அதை நடத்துமிடத்தில் சொல்லிவிட்டேன் என்று உங்கள் சுமை குறைய ஓர் பொருளாக இறைவனை பயன்படுத்துகிறோம் என்பதே இங்கு மெய் !!

கேட்டு கெடுத்துகொண்டதே இங்கு ஏராளாம் !!
கேட்க்காது அருளப்பட்டதோ தாராளம் !!
கேட்க்காது அருளப்பட்டதோ தாராளம் !!
மெய்யுணர்வோம் மேன்மைகொள்வோம் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே.