Thursday, May 28, 2020

*கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்?*

🕉 இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16 விதம், 32 விதம், 64 விதம் என்பதாக வேறுபாடுகள் உண்டு.
🕉 ஆனால் அனைத்துவிதமான பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் கட்டாயம் உண்டு.
🕉 தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல்.
🕉 அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம்.
🕉 அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும், கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம்.
🕉 தீபம் ஏற்றி வழிபாடு, கற்பூரம் காண்பித்து வழிபாடு இரண்டும் வெவ்வேறான பூஜா உபசாரங்கள்.
🕉 தற்சமயம் சில கோவில்களில் சில இடங்களில் (கற்பூரத்தால் அந்த இடம் மாசுபடுவதாக, தவறாக எண்ணிக்கொண்டு) இறைவனுக்கு கற்பூரம் காண்பிக்க வேண்டிய சமயத்திலும் கூட, தீபத்தையே ஏற்றிக் காண்பிக்கப்படுகிறது.
🕉 ஆனால், இவை இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு பலன்கள் உண்டு.
🕉 காந்திர் தீபம் இறைவனுக்கு எவ்வளவு தீபங்கள் ஏற்றுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தனின் மனதிலும், வாழ்விலும், குடும்பத்திலும் ஒளிப்பிரகாசம் ஏற்படும்.
🕉 இருள் அகலும் கற்பூரம் காண்பிப்பதால் மனதிலுள்ள அழுக்குகள் விலகி, மனம் இறைவனிடமே ஒன்றிவிடும்.
🕉 தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த தீபத்தில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது.
🕉 கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரைந்து போகும். இறுதியில் கற்பூரம் முழுவதுமாக எரிந்து போய் எதுவும் மீதமிருக்காது.
🕉 கற்பூரத்தைப் போல் பக்தர்கள் இறைவனிடத்தில் மனதை செலுத்த வேண்டும். மனது கற்பூரம்போல், கரைந்துவிட வேண்டும்.
🕉 மனது கரைந்தால், தான் என்னும் எண்ணம் விலகி இறைவனுடனே ஜ்யோதி ஸ்வரூபமாகக் கலந்து விடும். இதையே இறைவன் பக்தனுக்கு அருளுவார்.
இந்தத் தத்துவத்தை உணர்த்தவே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...