
விபி துரைசாமி - முக ஸ்டாலின்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. துரை சாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். துரை சாமிக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மரியாதை நிமித்தமாக தன்னை சந்தித்து, வி.பி. துரைசாமி வாழ்த்து தெரிவித்ததாக பாஜக தமிழக தலைவர் முருகன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், துரைசாமியை கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனையடுத்து தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காலை 9.30 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமாலயம் சென்று பாஜகவில் விபி துரைசாமி இணைய உள்ளார்.
No comments:
Post a Comment