Sunday, May 24, 2020

ஆளும் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு வழக்கு தொடரலாமா?

எதற்காக பிரியங்கா வாத்ரா காந்தி குடும்பம் தங்குவதற்கு பல லட்ச ரூபாய்க்குமேல் மாத வாடகை வரக்கூடிய பிரம்மாண்டமான நம்பர் 35 லோடி எஸ்டேட்டை... 2765 ஸ்கொயர் மீட்டர் பரப்பளவுள்ள... மாளிகையை அரசாங்கம் வெறுமனே கொடுத்திருக்கிறது..?
நம்பர் 10 ஜன்பத் மாளிகை இந்திய பிரதமர் தங்கும் வீட்டைவிட பல மடங்கு பெரியதாம். அதே போல் ராகுல் காந்தி இருக்கும் 12, துக்ளக் லேன் வீடும் பிரம்மாண்டமானதாம்.
நேரு குடும்பத்தில் இருக்கும் இந்த மூன்று பேருக்கும் (அம்மா, பிள்ளை, பெண்) மூன்று பிரம்மாண்ட மாளிகைகள் தனித்தனியாக நம் வரிப்பணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் சோனியாவும், ராகுல் காந்தியும் ஒரு தொகுதிக்கு MP யாகவாவது இருக்கிறார்கள். ஆனால்.. பிரியங்கா வாத்ரா காந்தி...
இந்தியாவின் MP இல்லை..!
இந்தியாவின் மந்திரி இல்லை..!
எந்த மாநிலத்திற்கும் முதல்வர் இல்லை..!
எந்த அரசாங்கப் பணியிலும் இல்லை..!
ஆனால்.. 1997 இலிருந்து இன்றுவரை பல கோடி மதிப்புள்ள இந்த மாளிகையில் தங்க என்ன தகுதி அந்த குடும்பத்திற்கு என்பது ஒருவருக்குமே தெரியாத ரகசியம்..!
அந்த வீடு இருக்கும் ஏரியாக்கள் SPG செக்யூரிடிக்குள் அடங்கும் என்கிறது அரசாங்க குறிப்பேடு.
ஏதாவது அரசியலமைப்பு விதியின் கீழ் மிகவும் ஊழல் செய்து ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த எந்த பதவியையும் வகிக்காதவருக்கு இவ்வளவு பெரிய உலகத்தரம் வாய்ந்த பங்களாவை அலாட் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா..?
தெரிந்தவர்கள் கூறுங்கள்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...