Monday, May 25, 2020

தலீவரும்_செயலும்..(நம் கற்பனையில்).

"வி.பி.தொரசாமிய ஏன் பதவி நீக்கம் செஞ்ச??"
"கமலாலயத்துக்கு போயி பாஜ தலைவர சந்திச்சாரு நைய்னா ..அதுக்குத்தான்.."
"ஏன் சந்திச்சா தப்பா??"
"கட்சிக் கட்டுப்பாட்ட மீறி போனாருன்னு.."
"எது கட்சி கட்டுப்பாடு..? "
"எதிர்க் கட்சி ஆபீஸ்ல போயி நம்ம அநுமதி இல்லாம சந்திச்சாரு.."
"நீ யாருகிட்ட அநுமதி வாங்கி வாஜ்பாயி அஸ்திக்கு அஞ்சலி செலுத்த போன?"
"அவர் மறைவுக்கு டெல்லிக்கு போகல.. அதான் அஸ்திக்கு மரியாதை செய்ய போனேன்.."
"அஸ்திக்கு மரியாதை செய்வதுதான் பகுத்தறிவா??"
"பகுத்தறிவுக்கும் நமக்கும் தொடர்பே இல்லையே நைய்னா ..அதான் போனேன்.."
"நீ யாரையும் கலந்துக்காம அஞ்சலி செலுத்த போகலாம்.. ஆனா தம் ஊர்க்காரரை சந்திச்சு நட்பு ரீதியா வாழ்த்து சொல்ல அவரு போனது தப்பா??"
"அப்டி இல்ல நைய்னா.. இந்த நேரத்துல அங்க போயிருக்கக் கூடாதுன்னு கட்சி நெனைக்குது.."
"கட்சி நெனைக்குதா.. நீ நெனைக்கிறியா?
"ரெண்டும் ஒன்னுதானே நைய்னா.."
"நயன்தாராவ பேசினாருன்னு ராதாரவிய பத்தி விட்ட.. விவஸாயிகள் போராட்டம் இப்ப தேவையில்லைன்னு சொன்னதுக்காக கே.பி. ராமலிங்கத்தை துரத்தி விட்ட..இப்ப முருகனை பாத்தாருன்னு வி.பி.தொரைசாமிக்கு கல்த்தா குடுத்த..இதுல ரெண்டுபேரு பாஜவுக்கு போயிட்டாங்க.. ஒருத்தரு போகப் போறாரு.. பாஜவுக்கு மெம்பர்ஷிப் இல்லைன்னு உன்கிட்ட கேட்டாங்களா??"
"சரி நைய்னா .. நீயா இருந்தா என்ன செஞ்சிருப்ப..?"
"ராதாரவி நயன்தாராவை பேசினப்ப ஒரு நடிகர் இன்னோரு நடிகையை பேசினாரு.. இதுல உனக்கென்ன வந்துதுன்னு பத்திரிகைகாரன் மேல பாய்ஞ்சிருப்பேன்.."
"கே.பி.ராமலிங்கத்தை...?"
"விவஸாய பிரிவின் சாயம் வெளுத்து விட்டது.. ஒடம்பொறப்பே.. நெஞ்சில் குத்துபட்டதை விட முதுகில் குத்துபட்ட விழுப்புண்களே எனக்கு அதிகம்.. புறநானூற்றுத் தாய் எனைக்கண்டு 'முதுகில் குத்துக்களைத் தாங்கிய #முதல்_வீரனப்பா_நீ ' என அள்ளியணைத்து ஆராட்டி.., பற்றித்தழுவி பாராட்டி..,
சிங்காரச் சீற்றத்துடன் சீராட்டுவது போல கனவு கண்டேன் என முதலைக் கண்ணீர் வடித்து ஒரு பக்கத்துக்கு மொர்சொலில கடிதம் தீட்டிருப்பேன்.. உடனே நம் ஊப்பீஸ் எல்லாம் அவரை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.. அதுக்கு மேலேயும் நம்மை எதிர்த்துடுவாரா அந்த ஆளு??"
"ஓ..அந்த விஷயத்துல அப்டி ஸிம்பதிய கிரியேட் பண்ணியிருக்கனுமா... சரி.. இந்த வி.பி.துரைசாமிய என்ன பண்ணியிருப்ப?"
"இருக்கவே இருக்கிறதே சாதி,மொழி அரஸியல்.. அதை வச்சு தொரைசாமியும் முருகனும் ஒரே சாதியினர்தானே.. இருவரும் தமிழர்கள் தானே...எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே ஊர்க்காரர்கள் தானே... பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கத்தானே நான் பாடு படுகிறேன்.. அதன் முதல் படியாக பார்ப்பன பாஜகவில் ஓர் பட்டியலினத்தவரை தலைமையாக்கியுள்ளது உள்ளபடியே நம் போராட்டத்தின் மாபெரும் வெற்றியல்லவா...அதற்காகத்தானே அவரை சந்தித்து வாழ்த்து சொல்ல நானே அநுப்பினேன்.. முருகன் என்பதோ பட்டியல் இனம் என்பதோ பாஜகவுக்கு புதிதாக இருக்கலாம்.. ஆனால் தமிழனுக்கும் கழகத்துக்கும் புதிதல்லவே.. என அறிக்கை தருவேன்.. இதென்னடா புது உருட்டா இருக்கேன்னு முருகனும் தொரசாமியும் குழம்பிடடுவாங்க.. அதை பயன்படுத்தி தம்பி எல். முருகனின் பாட்டனாரின் சித்தப்பாவும் நானும் ராபின்ஸன் பூங்காவில் கொட்டும் மழையில் அறிஞர் அண்ணா நம் இயக்கத்தை துவங்கியபோது அண்ணாவுக்கு நாங்கள் குடைபிடித்து நின்ற வரலாறை தம்பி முருகன் மறந்தாலும் என் நினைவில் பசுமையாக நினைவலைகள் நினைவூட்டி நினைக்கச் செய்தன..கண்களை கண்ணீரில் நனைக்கச் செய்தன...இப்டி அடிச்சு விடுவேன்.. இப்டி பல கதைகளை அடிச்சு விட்டுத்தான் இல.கணேசன் முதல் பொன்னார், சிபிஆர்..தமிழிசை வரை என்னை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டேன்..இதுக்கும் மேலேயும் தொரசாமி அங்க போவாரா.. போனா முருகன் கட்சில சேத்துப்பாரா...?"
"-------------------------😳"
"உனக்கு அரஸியலும் தெரியல.. ஆளுமையும் இல்லை.. பேசவும் வரல..புளுகவும் தெரியல.. அழுகவும் தெரியல..நடிக்கவும் தெரியல.. இப்டி கழகத்தை கண்ணியத்தோட கட்டிக் காக்கும் எந்த திறணும் இல்லாத உன் கையில் கழகம்.. இப்டி இருந்தா எவன் மதிப்பான் உன்னை?? இனிமே இந்த இயக்கத்தை சமாதிக்கு அநுப்புவதுதான் மிச்சம்..போ.."

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...