Saturday, May 30, 2020

வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ள ( கொல்ல ) வேண்டும்... வாங்க பழகலாம் ...

பழகுவதில் நம்மை மிஞ்ச யார் இருக்கா இந்த பூமியில் ?
இது என்ன புதுசா நமக்கு ?
என்னமோ , இந்த நோய்க்கு மட்டும் தான் மருந்து ( அல்லோபதி) கண்டு பிடிக்கவில்லை என்பது போலவும் , இந்த ஒரு நோயை மட்டும் தான் குணமாக்க வழியே இல்லை என்பது போலவும் ஒரு மாயை உருவாக்கப் படுகிறது - எதிலும் , எப்போதும் அரசியல் !!!
ஏற்கனவே பழகி பழகி , நம்முடன் நட்புடன் இருக்கும் நோய்கள் பலவுண்டு. மருந்தே இல்லை- இல்லவே இல்லை ...
குணப்படுத்தவே முடியாது - கூடவே வைத்துக் கொள்ளலாம்.
1. இரத்த அழுத்த நோய் (BP ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
2. நீரிழிவு நோய் ( Diabetic ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
3. தைராய்டு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
4. சிறுநீரக கோளாறு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
5. இருதய நோய்கள் - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
6. வயிற்றுப புண் ( Ulcer ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
7. ஆஸ்த்மா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
8. டெங்கு , சிக்கன் குன்யா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
இப்படி எதற்குமே மருந்து இல்லாமல் , நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்...
காரணம் - மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம் - நவீன மருத்துவம் - ஆதாரப் பூர்வமானது - உயிர் காக்கும் மருத்துவம் என்று மக்கள் நம்பியது . மருத்துவம் தவறான பாதையில் பயணிக்கிறது , நாமும் அதன் தோளில் ஏறி சவாரி செய்கிறோம் என்பதை உணர்த்தும் தருணம் இது ...
மருந்து என்றால் குணப்படுத்த வேண்டும் - கட்டுப்படுத்த கூடாது.
இரத்த அழுத்தம் - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
சர்க்கரை அளவு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
கொலஸ்ட்ரால் அளவு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
இதயத்துடிப்பு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
இந்த அளவீடுகள் எல்லாம் ஏன் அதனதன் இயல்பு நிலையில் இருந்து மாறுபடுகின்றன. என்ன காரணம் ? யோசிக்க நமக்கு ஏது நேரம் . ஒரு பிரச்சினைக்கான (நோய் ) காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கான தீர்வை (மருத்துவம்) தேடாமல் - பிரச்சினையை (நோயை) கட்டுக்குள் வைப்பது என்ன விதமான வைத்திய முறை.
சந்தையில் (Market) விற்பதை எல்லாம் நாம் வாங்கிக் கொள்வது இல்லை ...நமக்கு என்ன தேவையோ அதை தான் தேடி வாங்கி வருகிறோம். அது போல எதை அதிகமாய் கேட்கிறோமோ (Demand ) அது தான் சந்தைப்படுத்த பட வேண்டும். நமது அவசர ( சோம்பேறித்தனமான) வாழ்க்கை முறை - அதை அனுமதிப்பதில்லை. மக்கள் காரணமும் , விளக்கமும் , தீர்வும் தேட ஆரம்பித்தால் - ஒரு வேளை , நிலைமை மாறலாம். மருந்து மட்டும் அல்ல... எல்லாப் பொருட்களும் , நமக்கு தேவையோ இல்லையோ - நம்மிடம் விற்கப்படுகின்றன.
நோயுடன் மட்டுமா வாழப் பழகிக் கொண்டோம்...
பண மதிப்பிழப்பு - வாழப் பழகிக் கொண்டோம்...
பெட்ரோல் விலை உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
சுங்கச்சாவடி கட்டண உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
மின் கட்டண உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
கூடங்குளம், ஸ்டெரிலைட், LG பாலிமெர்ஸ் - வாழப் பழகிக் கொண்டோம்...
லஞ்சம் கொடுக்க பழகிக் கொண்டோம்
இன்னும் இன்னும் ....
நமக்கா சொல்லித் தர வேண்டும் - பழகிக் கொள்ள ...
வைரஸுடன் பழகி - கொல்வோம் !!!
வெல்வோம் !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...