Sunday, May 24, 2020

சோனியாவை(அன்டோனியா) அறிந்து கொள்வோம் டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி.

Source : Do You Know Your Sonia? By Dr. Subramanian Swamy.
திருமதி சோனியா பின்னனி குறித்து இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, மூன்று பெரும் பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு, அம்மையாரின் உண்மையான வாழ்க்கைப் பின்னனியை மறைத்துப் பின்னப்பட்ட ஒரு பெரும் மோசடியாகும்.
முதலில், அன்டோனியா என்பதே அவரின் உண்மைப் பெயர். பலரும் நினைப்பது போல சோனியா அல்ல. இதனை உறுதி செய்யும் விதமாக இந்தியாவிற்கான இத்தாலிய தூதர் இது குறித்து ஏப்ரல் 27, 1983 அன்று இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதம் ஏதோ ஒரு காரணத்தால் இன்றுவரை வெளியிடப்படவில்லை. சோனியாவின் பிறப்புச் சான்றிதழ் அவரை அன்டோனியா என்றே குறிப்பிடுகிறது. சோனியா என்பது அவரின் தகப்பனாரான ஸ்டெ·பானோ மாய்னோவால் (Stefano Maino) அழைக்கப்பட்ட ஒரு பெயராகும். மேலும், சோனியா என்பது ஒரு ரஷ்யப் பெயரே அன்றி இத்தாலியப் பெயர் அன்று.
மேற்படி ஸ்டெ·பானோ இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலிய நாஜிப் படையில் ஒரு தொண்டராக (volunteer) தன்னை இணைத்துக் கொண்டவர். ரஷ்யப் படைகளால் பிடிக்கப்பட்டு மூன்றாண்டுகள் வரை ரஷ்யச் சிறையில் இருந்தவர் இந்த ஸ்டெ·பானோ மாய்னோ. ரஷ்யாவில் இருந்த காலங்களில் தன்னை ஒரு ரஷ்ய ஆதரவாளராக முழுமையாக மாற்றிக் கொண்டவர் இவர். இத்தாலியை விடுவித்த அமெரிக்க ராணுவம் அனைத்து இத்தாலிய ·பாஸிஸ்டுகளின் சொத்துக்களையும், திருவாளார் மாய்னோவின் உட்பட, பறிமுதல் செய்தது அவர் சோவியத் ஆதரவாளராக மாறியதற்கான ஒரு முக்கிய காரணம் எனலாம்.
இரண்டாவது, சோனியா தான் இந்திய மக்களவை உறுப்பினராவதற்கென சமர்ப்பித்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி இத்தாலியின் ஒர்பஸானோவில் (Orbassano) பிறந்தவர் அல்ல என்பது. அவரின் பிறப்புச் சான்றிதழில் அம்மையாரின் பிறந்த இடம் லூஸியானா (Luciana) என்றே குறிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை சோனியா மறைக்க விரும்புகிறார் என்று நம்ப இடமிருக்கிறது. அவரின் தகப்பனாரின் நாஜி மற்றும் முஸோலியின் ·பாஸிஸ்டுத் தொடர்புகள், 1945-ஆம் வருடம் துவங்கி இன்றுவரை தலைமறைவாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாஜி-·பாஸிஸ்டுகளுடன் அவரது குடும்பத்தாருக்கு இருக்கும் தொடர்புகள் போன்றவற்றை அவர் மறைக்க நினைத்திருக்கலாம்.
தேவையற்ற முறையில் தான் பிறந்த இடத்தை மாற்றிக் கூறும் அர்த்தமற்ற பொய்க்கு இதைவிட வேறு காரணங்கள் எதுவும் இருக்க நியாயமில்லை. இந்த நாஜி-·பாஸிஸ்டுகளின் தலைமையகம் இத்தாலிய-ஸ்விஸ் நாடுகளின் எல்லையில் இருக்கும் லூஸியானாவில், அதாவது சோனியா பிறந்த இடத்தில், இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
மூன்றாவது, சோனியாவின் கல்வித் தகுதி குறித்தானது. திருமதி. சோனியாவின் அதிகபட்ச கல்வித் தகுதி உயர்நிலைப் பள்ளியைத் தாண்டிய ஒன்றில்லை. 2000-ஆம் ஆண்டிற்கான லோக் சபா தேர்தலின் போது, ராய் பரேலி தொகுதியின் தேர்தல் கண்காணிப்பாளருக்கு அவர் அளித்த ஆவணங்களில், உலகின் மிக உயரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தான் ஆங்கிலப் படிப்பு படித்ததாகவும், அதன் மூலம் ஆங்கிலப் படிப்பில் டிப்ளமோ பெற்றிருப்பதாகவும் ஒரு பொய்யான தகவலை அளித்திருக்கிறார்.
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், திருமதி சோனியா காந்தி உலகின் எந்தவொரு கல்லூரியிலும் சேர்ந்து படித்ததில்லை என்பதுதான். இத்தாலியில் அவர் வாழ்ந்த ஒப்ராசபோ நகரிலிருந்து 15 கி.மீ தூரத்திலிருக்கும் ஒரு கத்தோலிக்கப் பள்ளியான மரியா அஸ்சிலியாட்ரைஸில் (Maria Ausiliatrice) படித்தது மட்டுமே அவரின் அதிகபட்ச கல்வித்தகுதியில் அடங்கும்.
அந்நாட்களில் இத்தாலியில் காணப்பட்ட வறுமையின் காரணமாக சோனியா போன்ற பல இளம் இத்தாலியர்கள் மேற் சொன்னது போன்ற மிஷனரி பள்ளிகளுக்கு மட்டுமே செல்ல முடிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அதன் பின்னர் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத பல இளம் இத்தாலிய ஆண்களும், பெண்களும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு வீட்டு வேலை செய்யும் தாதிகளாகவும், ஹோட்டல் பணியாளர்களாகவும் மற்ற சில்லரை வேலைகள் செய்வதற்கும் சென்றனர். சோனியாவின் தகப்பனார் ஒரு கட்டுமானப் பணியாளர் (Mason). தாயார் கூட்டுறவு விவசாயம் (Share cropper) செய்பவர். மற்ற இத்தாலியர்களைப் போலவே வறுமையில் வாடிய குடும்பம் மாய்னோக்களுடையது. எனவே சோனியாவும் இங்கிலாந்திற்கு பணி செய்யச் செல்ல நேரிட்டது.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் டவுனுக்குச் (கவனிக்க, கேம்பிரிட்ஜ் பல்கலக்கழகமல்ல) சென்ற சோனியா, தான் இங்கிலாந்தில் வீடுகளில் வேலை செய்வதற்குத் தேவையான ஆங்கிலம் பேச அறியும் பொருட்டு, லெனாக்ஸ் ஸ்கூல் (Lennox School) எனப்படும் பள்ளியில் சேர்ந்தார் (1970-களிலே அந்தப்பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது). அவ்வளவுதான் அவரின் "கல்வியறிவு".
இந்திய சமூகத்தில் கல்வி ஒரு உன்னதாமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கற்றவர்களை மதிக்கும் இந்திய சமூகத்தினரை முட்டாள்களாக்குவதற்கு சோனியா செய்த தகிடுதத்தமே அவரின் "கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கில டிப்ளமோ". Breach of Ethics Rules எனப்படும் சத்தியப் பிரமாணத்திற்கு எதிரான இந்த ஒரு விஷயமே அவரை இந்திய பாராளுமன்றத்தில் பதவி வகிக்கும் தகுதியை இழக்கச் செய்கிறது. அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கவும் வழிவகை செய்கிறது. இந்திய பீனல் கோடின்படி இது ஒரு கிரிமினல் குற்றமும் கூட.
தேவையற்ற இந்த மூன்று பொய்களுமே சோனியா குறித்தான சந்தேகங்களை அதிகரிக்க வைப்பதுடன், அவரின் உண்மையான உள் நோக்கம் (hidden agenda) குறித்தான கேள்விகளையும் நம்முள் எழுப்புகின்றன. எனவே அவரைப்பற்றி நாம் மேலும் ஆராய்ந்து அறிந்து கொள்வது இங்கே அவசியமாகிறது.
இங்கிலாந்தில் வேலை செய்வதற்குத் தேவையான ஆங்கில அறிவு பெற்ற பின்னர், திருமதி சோனியா கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள வார்சிட்டி ரெஸ்டாரண்டில் (Varsity Restaurant) பணிப்பெண்ணாக (Waitress) வேலைக்கமர்ந்தார். மறைந்த ராஜிவ் காந்தியை அவர் முதன் முதலில் சந்தித்ததும் அங்கேதான் (1965). கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவராக இருந்த ராஜிவ், அப்பல்கலைக்கழகத்தின் கடுமையான பாடத்திட்டங்களை அதிக காலம் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே, 1966-இல் கேம்பிரிட்ஜ்ஜை விட்டுவிட்டு, இலண்டனிலுள்ள இம்பீரியல் காலேஜ் ஆ·ப் இன்ஜினியரிங்கில் சிறிது காலம் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் சோனியாவும் இலண்டனுக்கு இடம் பெயர்ந்தார்.
எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின்படி, சோனியாவிற்கு சல்மான் தாஸ்ஸிர் (Salman Thassir) எனப்படும் லாகூரைச் சேர்ந்த ஒரு பணக்கார பாகிஸ்தானி நடத்தி வந்த ஒரு நிறுவனத்தில் (அது என்ன நிறுவனம் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன) வேலைக்குச் சேர்ந்தார். துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வந்த சல்மான் தாஸ்ஸிர், அவரின் பெரும்பாலான நாட்களை இலண்டனிலேயே கழித்து வந்தார். அது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI-ஐச் சேர்ந்த ஒரு உளவாளியின் புர·பைலுக்கு (profile) மிகவும் பொருந்துகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ராஜிவ் காந்தி அவரின் பொறுப்பற்ற ஊதாரித்தனமான செலவுகளால் கடனாளியாகி இருந்தார் (இந்திரா காந்தி இது குறித்து மிகவும் கோபம் கொண்டிருந்தார். 1965-இல் இங்கிலாந்தின் Brandeis University-யின் தங்கும் விடுதியில் எனக்களித்த தேனீர் விருந்தின் (!) போது என்னிடம் நேரடியாகவே இது குறித்து வருந்தியிருக்கிறார்). கூடக் குறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த சோனியா, ராஜிவிற்குத் தேவையான பணத்தை கடனளித்துக் கொண்டிருந்தார்.
அதே கால கட்டத்தில் இலண்டனில் இருந்த சஞ்சய் காந்திக்கு ராஜிவ் எழுதிய கடிதங்களில், அவர் சோனியாவிடம் கடன் பட்டிருப்பது குறித்து எழுதியிருக்கிறார். ராஜிவை விடவும் பண விவகாரங்களில் அதிக செல்வாக்குடன் இருந்த அவரின் சகோதரர் சஞ்சயிடம், தான் சோனியாவிடம் பட்ட கடனை அடைப்பதற்குத் தேவையான உதவிகள் செய்யுமாறும் அவர் கேட்டிருந்ததும் இதன் மூலம் தெளிவாகிறது.
அந்நாட்களில் ராஜிவ் மட்டுமே சோனியாவிடம் நட்பு கொண்டிருக்கவில்லை. அவருடன் நட்பு கொண்டிருந்த இன்னொரு இந்தியப் பிரபலம் மாதவராவ் சிந்தியா. ஜெர்மானியரான ஸ்டீக்ளர் (Stiegler) என்பவருடனும் சோனியா நட்பு கொண்டிருந்ததாக அறிய வருகிறது.
மாதவராவ் சிந்தியாவுடனான சோனியாவின் நட்பு அவரின் திருமணத்திற்குப் பின்னரும் (ராஜிவ் காந்தியுடனான) தொடர்ந்தது. 1982-ஆம் வருடத்தின் ஒரு நாளில் அதிகாலை 2 மணிக்கு, தில்லி மெயின் கேட்டில், ஐ.ஐ.டி.க்கு அருகில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கினார் மாதவராவ் சிந்தியா. அவருடன் காரில் இருந்த இன்னொரு நபர் சோனியா மட்டுமே. இருவருக்குமே உடலெங்கும் நல்ல காயங்கள்.
அந்நேரத்தில் அதிக மனித நடமாட்டம் அற்ற அப்பகுதியில், தேனீர் அருந்துவதற்காக ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து வெளியே வந்த ஒரே ஒரு மாணவர் உதவிக்கு ஓடிவந்தார். காரிலிருந்து இருவரையும் வெளியே இழுத்துப் போட்ட அந்த மாணவர், காயமடைந்த சோனியா காந்தியை ஒரு ரிக்ஷாவில் ஏற்றி திருமதி இந்திரா காந்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். காயங்களுக்குச் சிகிச்சை செய்து கொள்ள மருத்துவமனைக்குச் செல்ல பிடிவாதமாக சோனியா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. கால் முறிந்து கிடந்த மாதவராவ் சிந்தியா இதுகுறித்து எதுவும் செய்யும் நிலைமையிலும் இல்லை. சம்பவ இடத்தை விட்டு சோனியா வெளியேறிய சிறிது நேரத்திற்குப் பின் வந்த தில்லி போலிசாரின் உதவியுடன் மருத்தவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் சிந்தியா. பிற்காலங்களில் சோனியா மீது கடுமையான விமரிசனங்களை வைத்த மாதவராவ் சிந்தியா, அவரின் நட்பு வட்டாரங்களில் சோனியாவின் நடவடிக்கை மீதான சந்தேகங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார். கடைசியில் மிக மர்மமான முறையில் நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா இறந்து போனதுதான் பரிதாபம்.
இத்தாலியின் ஒர்பஸானோவிலிருக்கும் ஒரு தேவாலயத்தில் மிகவும் சர்ச்சைக்கிடமாக, தடாலடியாக நிகழ்ந்த ராஜிவ்-சோனியாவின் திருமணம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அது குறித்து பொதுவில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வெளியில் தெரியாத சில காரணங்களால் திருமதி இந்திராகாந்தி ஆரம்பத்திலிருந்தே இத்திருமணத்திற்கு எதிரானவராயிருந்தார்.
சோவியத் யூனியனின் கண்மூடித்தனமான ஆதரவாளரான டி.என். கவுலின் (T.N. Kaul) வற்புறுத்தலுக்குப் பிறகு இறங்கி வந்த இந்திரா காந்தி, புது தில்லியில் இந்து முறைப்படியான ஒரு திருமணத்தை இருவருக்கும் நடத்தி வைத்தார். "இந்தோ-சோவியத்" நட்புறவு பலப்படுவதற்கு இந்தத் திருமணம் பெரிதும் உதவும் என்று டி.என். கவுல் இந்திராவிடம் எடுத்துச் சொன்னதாகத் தெரிகிறது. இதில் தலையிடுமாறு அன்றைய சோவியத் யூனியன் அவரை வற்புறுத்தி இருக்க வேண்டும். இல்லாவிடில் டி.என். கவுல் இந்த விஷயத்தில் தலையிட்டிருக்க அவசியம் ஏதும் இல்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
சோனியாவின் மீது சோவியத் யூனியன் அக்கறை கொள்ளக் காரணங்கள் பல உண்டு. ஒரு இந்தியப் பிரதமரின் மகன், இலண்டனில் இருக்கும் ஒரு பெண்ணிடம் காதல் கொள்வது என்பது சோவியத்தின் உளவுத்துறையான KGBயின் கவனத்தை ஈர்க்கவே செய்திருக்கும். ஆ·டர் ஆல் இந்தியா ஒரு சோவியத் நட்பு நாடு. எனவே KGB சோனியாவின் பின்னனியை ஆராய்ந்திருப்பார்கள் என்பதும், அவர் தங்களின் முன்னாள் இத்தாலிய நண்பரான ஸ்டெ·பானோவின் மகள் என்பதனை அறிந்திருப்பார்கள் என்பது குறித்தும் எந்த சந்தேகமும் இல்லை.
ராஜிவ்-சோனியா திருமணத்தின் மூலம் இந்தியப் பிரதமரின் வீட்டினுள் தங்களது ஆள் ஒருவர் நுழைவதன் மூலம் கிட்டும் சாதகங்கள் கணக்கிலடங்காதவை. எனவே, இத் திருமணம் நடப்பதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கினார்கள். இந்திராவின் வீட்டில் ஏற்கனவே இருக்கும் தங்களின் அகழெலிகள் (moles) மூலம் இதனைச் சாதித்தது .
Image may contain: 1 person, closeup, text that says 'facebook.com/fansofsoniagandhi'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...