Sunday, May 31, 2020

வைகாசி வளர்பிறை ஏகாதசி,.

*🔯வைகாசி வளர்பிறை ஏகாதசியில் திருமால் வழிபாடு!!*
*🔯வைகாசி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி தினம் வருகிறது.*
⚜️இந்த தினத்தில் நாம் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பெறலாம். வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி ” மோகினி ஏகாதசி” எனப்படுகிறது.
திரிஷ்டிமான் என்கிற மன்னன் அரச குலத்தில் பிறந்து அரச போகங்களை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருந்தான். அப்படிப்பட்ட மன்னன் திரிஷ்டிமான் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, வைகாசி வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து வாழ்வின் மாயையாகிய சுக அனுபவித்திலிருந்து மீண்டு பெருமாளின் பூரண அருளை பெற்றான்.
*⚜️இந்த வைகாசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபடலாம். காலை முதல் மாலை வரை விரதம் இருக்கலாம். அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
*⚜️வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும்.*
இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும். பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...