Friday, May 29, 2020

இந்த முட்டாள்தனம் எப்போது முடிவுக்கு வருமோ…!

எல்லா நேரங்களிலும் ,எல்லா இடங்களிலும் முககவசம் அவசியமில்லாதது மட்டுமல்ல,ஆபத்தானதும் கூட!
முகக் கவசங்கள் நம் இயல்பான சுவாசிக்கும் திறனை பாதிக்கின்றன! முககவசம் போடும் போது நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் நமக்கு கிடைப்பதில்லை. இதனால், நாளடைவில் நமது உடல் நலன் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஒரு மனிதன் உயிர்வாழ உள்ளிழுக்கும் மூச்சுகாற்று இன்றியமையாதது!
அப்படி இழுக்கும் மூச்சு காற்று ஆழ்ந்த சுவாசமாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர். ’’ஆழ்ந்து சுவாசிக்காதவன், அற்பாயுசில் போவான்…’’ என்பது சித்தர்களின் வாக்கு!
ஏனெனில்,அப்படி உள்ளிழுக்கும் மூச்சு காற்றில் உள்ள ஆக்சிஜனே ரத்தத்தை தூய்மை செய்யும்! நாம் ஆழ்ந்து மூச்சு இழுக்கும் போது தான், நாம் சாப்பிட்ட உணவிலிருக்கும் சக்தியை நம் உடலிலுள்ள செல்கள் கிரகித்துக் கொள்ளும்! சரியாக ஜீரணமும்,கழிவு வெளியேற்றமும் நடக்கும்!
சரியான சுவாசம் இல்லாமல் போனால்,மனதில் கவலைகளும்,பயமும் இயல்பாக மேலெழும்.அதே சமயம் ஆழ்ந்த சுவாசம் ஒருவனுக்கு அளப்பரிய தன் நம்பிக்கையைத் தரும்!செயல் திறனை மேம்படுத்தும்! இது என் சொந்த அனுபவம்.
இயற்கையிலேயே நமது மூக்கே ஒரு சிறந்த கவசமாகத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் மூக்கு துவாரங்களில் உள்ள ஈரமான சவ்வுகள் மூக்கில் நுழையும் கிருமிகளை தடுத்துவிடுவதோடு,அவற்றை வெளியேறும் மூச்சுகாற்றில் வெளித் தள்ளிவிடும்! அதையும் மீறி,தவறான கிருமிகளோ,தூசோ உள்ளே நுழைய முற்பட்டால்,அந்த நொடியிலேயே அவற்றை வெளியேற்ற உடனே நம் சுவாச மண்டலம் சுறுசுறுப்புடன் தும்மலை வரவழைத்து அவற்றை பலமாக தள்ளி வெளியேற்றுகிறது.
கொரோனா காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும், காற்றில் தேவையற்ற நுண்கிருமிகள் மிதந்து வருவதும்,அவற்றை நமது சுவாச மண்டல உறுப்புகள் தூக்கி எறிவதும் காலந்தோறும் நடக்கும் இயல்பான செயலேயாகும்!
நோய்வராமல் தடுக்கவென்று அணியும் முகக் கவசங்கள் அணிவதை தினசரி வழக்கமாகத் தொடர்ந்தால்,அது நமக்கு நிச்சயமாக எண்ணற்ற நோய்களைத் தான் கொண்டு வந்து சேர்க்கும்.
தனித்து நடக்கும் போதா,தனிமையாக இருக்கும் போதோ கூட இன்றைக்கு பலர் முகக் கவசம் அணிவதை பார்க்கும் போது அவர்களின் அறியாமையை நினைத்து வருத்தமாக உள்ளது.
நெரிசல் மிகுந்த இடத்திலும், மிக நெருக்கமாக அறிமுகம் இல்லாதவர்களுடன் பேச நேர்கையிலும் மட்டுமே அதை பயன்படுத்திவிட்டு உடனே, கழற்றிவைத்துவிட வேண்டும்.
மேலும் தும்மலோ,இருமலோ,கொட்டாவியோ வந்தால்,உடனடியாக முகக் கவசத்தை அகற்றி,அவற்றை அனுமதியுங்கள்! இவற்றை ஒரு போதும் அடக்கக் கூடாது.
மக்களை முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்குவதை விட நுரையீரலை பாதிக்கும் மோசமான சுற்றுசூழலுக்கு முற்றுபுள்ளி வைக்க அரசு முயன்றால்,அது அனைவருக்கும் நன்மை தரும்! அதீத புகை கக்கும் வாகனங்கள்,ஆலைகள், தண்ணீரையும் கற்றையும் மாசுபடுத்தும் ரசாயன ஆலைகள் ஆகியவற்றுக்கு பச்சைகொடி காட்டிவிட்டு, நம்மை மட்டும் முகக் கவசம் அணியாவிட்டால் தண்டனை,அபராதம்,சிறை என்று பயமுறுத்துவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்?
’’குழந்தைகளுக்கு முகக் கவசம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’’ என்று தற்போது ஜப்பான் மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
’’மாணவர்கள் முகக் கவசம் அணிவது சுவாத்தை கடினமாக்கி, சுவாசக் கோளாறு நோய்களை அவர்களுக்கு உருவாக்கிவிடும்.ஆகவே தவிர்க்க வேண்டும்’’ என்று இலங்கை மருத்துவத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாம் முகக்கவசம் அணியும் போது, நாம் வெளிவிடும் நச்சுத் தன்மைமிக்க கார்பண்டை ஆக்சைடை மீண்டும் நாமே உள்ளிழுக்கும் அவலம் நேருகிறது. இதனால்,சிறிது நேரத்திலேயே நாம் அணியும் முகக் கவசமே நச்சுத் தன்மைமிக்கதாக மாறிவிடுகிறது. அதனால் தான் ஒரு முறை அணிந்த முகக் கவசத்தை அடுத்தமுறை அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவற்றை முறையாக ’டிஸ்போஸ்’ செய்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தொடர்ந்து முகக் கவசம் அணியும் என் நண்பர்களில் சிலர் தலைவலி வருவதாகவும்,சிலர் தோல் சார்ந்த பிரச்சினைகள் வருவதாகவும்,மற்றும் சிலர் சோர்வும்,உற்சாகமின்மையும் ஏற்படுவதாகவும் என்னிடம் தெரிவித்தனர்.
ஆக,முகக் கவசம் என்பவை வினையை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும்!
ஒரு உண்மையை அழுத்தமாக சொல்கிறேன். கொரோனாவை வெல்வதற்கு நமக்கு வலுவான நுரையீரல் தான் மிக,மிக அவசியம்! ஆனால் முகக்கவசம் என்பது கண்டிப்பாக நம் நுரையீரலை வலுவிலக்க வைக்கிறது. ஆகவே, நுரையீரலை பலப்படுத்த பிராணாயாமம்,யோகா, நாடிசுத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்தாலே போதுமானது. அத்துடன் துளசி,தூதுவளை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்தாலே போதும்!
முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதில் இருந்து அதை ஒரு கலாச்சாரமாகவே மாற்றி நிலை நிறுத்திவிட ,வியாபாரிகளும்,விவஸ்தை கெட்டவர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கட்சி சின்னங்கள், கொடிகள்,நாட்டின் கொடிகள், நடிகர், நடிகைகள் படங்கள் ஆகியவை பொறித்த முகக் கவசங்கள் தயாராகிவருகின்றன! இன்னும் சில நாடுகளில் பேஷனான முகக் கவசங்கள் தாயாரிக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய நிலையில் எனக்குத் தெரிந்த வரை 15 ரூபாயிலிருந்து,1,500 ரூபாய் வரைக்குமான முகக் கவசங்கள் சந்தைக்கு வந்து சக்கைபோடு போடுகின்றன!இதில் தான் இனி எதிர்காலம் என்று திருப்பூரில் மட்டும் 1,500 நிறுவனங்கள் முகக்கவசத் தயாரிப்பில் வேகம் காட்டிவருகின்றன. ரூ 300 கோடி ஆர்டராம்! வாழ்த்துகள்!வேறென்ன சொல்ல!
அதே சமயம்,’’எந்த முகக் கவசமும் முழுப் பாதுகாப்பானதில்லை’’ என்று மருத்துவ உலகமே ஒத்துக் கொள்கிறது. ஆனால், நோய் குறித்த பயமும்,பதற்றமும் முகக்கவச கலாச்சாரத்தை அதிகாரம் கொண்டு நிலை நிறுத்த முயல்கிறது.
நான் இங்கு என்ன சொல்லியும், எதுவும் இங்கு மாறிவிடப் போவதில்லை. எனினும், இயற்கை சார்ந்த வாழ்வியலில் கொள்கை பிடிப்புள்ளவன் என்ற வகையில் என் மனசாட்சி கொஞ்ச நாட்களாகவே ,’’வருவது வரட்டும், எழுதிவிடு! அச்சுறுத்தலோ, அவதூறோ.. கவலையில்லை.!’’ என வலியுறுத்தியதற்கு ஏற்ப எழுதிவிட்டேன்.
நான் கூறியவற்றை பரிசீத்து,சுயமாகச் சிந்தித்து உங்கள் விருப்பபடி முடிவெடுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...