Wednesday, May 27, 2020

உப்பு,மிளகு ரகசியம் இது தான்.

இதை படித்த பின் உங்களை சுற்றி வாழும் ஒரு 12 பேருக்காவது இந்த அறிவியலை புரிய வையுங்கள். முந்தைய தலைமுறை இவற்றை செய்யாமல் விட்டதாலேயே கோவில் பற்றிய ஞானம் அழிந்து வருகிறது.
இன்று பெரும்பாலான கோவில்களில் கொடிமரத்தின் அடியிலும் சிலைகளின் மீதும் உப்பை கொட்டி வழிபடுகின்றனர். இது தவறு. சித்தர்கள் உணர்த்திய உண்மையை அறிந்து கொள்ளாமல் அவர்கள் கட்டிய கோவில் சிலைகளை அரித்து, அழிப்பது நாம் மடையர்கள் என்பதையே காட்டுகிறது. அதன் உண்மையை அறிவோம்.
உப்பின் பிறப்பிடம் கடல். இன்று நிலப்பரப்பாக நாம் வாழும் எவ்விடமும் சில கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்தவைகளே. மொத்த உலகமே உப்பின் மயம்தான். அவ்வகையில் மண்ணும் மண்ணில் தோன்றும் தாவரங்களும் அவற்றை உண்ணும் புழு, பூச்சிகள், விலங்கு, பறவை, மனிதன் என எல்லாமே உப்பின் வெவ்வேறு வடிவங்கள் தான். ‘உப்பிருந்த பாண்டம்’ என்று சித்தர்கள் உடம்பை பற்றி பாடியதன் பின்னுள்ள அறிவு இதுதான்.
உப்பு ஒரு சுவை என்பதை தாண்டி அதிலுள்ள மின்னாற்றலே உடலையும் மூளையையும் இயக்குகிறது. அடுத்த ஒரு 21 நாட்களுக்கு உப்பில்லாத உணவு மற்றும் உப்பு குறைவாக உள்ள காய்கறி, பழங்களை உண்டு வாருங்கள். உங்களின் உடல் இயக்கத்திலும், சிந்தனையிலும் உள்ள மின்னாற்றல் குறைந்து போகும். சிடு சிடு வென திரியும் பலர் மந்தமாகி போவர். ‘நீ உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய்’ என்று ரோஷம் பற்றிய சொல்லாடல் இன்றும் வழக்கில் உள்ளது அதனாலேயே.
உப்பின் அளவு உடலில் அதிகரித்தாலும் உடல் அழியும். உப்பால் அரிக்க முடியாத பொருள் எதுவும் இல்லை. உப்பு ரத்தத்தில் அதிகரிப்பதால் உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. எல்லா வித நோய்களுக்கும் இது தான் தொடக்கம். உடலின் காரத்தன்மையை அதிகப்படுத்தும்போது நோய் நீங்குகிறது. இங்கு காரத்தன்மை என்பது காரச்சுவை அல்ல. சுக்கு, சீரகம், மிளகு, கடுக்காய் ஆகியவற்றில் காரத்தன்மை அதிகம். அதனாலேயே சித்தர்கள் தம் பெரும்பாலான உணவுகளில் இவைகளை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தினர்.
குடும்ப வாழ்க்கையில் உள்ள மக்களுக்கு உப்பும் அதனால் உண்டாகும் உணர்சிகளும் ஒரு அளவில் தேவை. ‘சம்சார கடல்’ என்று உலக வாழ்வை மறைமுகமாக கடலுடன் ஒப்பிட்டது இந்த உப்பின் ஆற்றலை உண்மையை மறைப்பாக உணர்த்தவே சொல்லப்பட்டது. ஞானம் பெற விரும்பும் மனிதர்கள் அவ்வுணர்ச்சிகளை வென்று யோகப்பாதையில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அதற்கு கருவியாக உள்ள உடலை நீண்ட நாள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் காரத்தன்மை பற்றிய முழு அறிவும் பெற வேண்டும். இதை கோவிலுக்கு வரும் மக்கள் உணர்ந்து கொள்ளவே இரண்டு மண் கலசங்களில் உப்பும் மிளகும் இட்டு கொடிமரத்தின் அருகில் வைத்து விடுவார்கள். ஆனால் இன்று மக்கள் அவற்றின் பொருள் விளங்காமல் சித்தர்கள் கட்டிய கோவில் கொடிமரங்களையும் சிலைகளையும் அரிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது மடமை அல்லவா. உங்கள் வீட்டு பெண்களிடமும் சிறுவர்களிடமும் இந்த அறிவை புகட்டுங்கள். கோவிலும் காக்கப்படும் அதன் அறிவியலும் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும்.
சித்தர்களும் பெரியவர்களும் ஏன் இத்தகைய அறிவை மறைப்பாக சொல்ல வேண்டும்? ஒன்றை பல வழிகளில் உடைத்து, சேர்த்து, ஆராய்ந்து முடிவினை பெறும்போதுதான் மூளை தன் எல்லைகள் தாண்டி சிந்திக்க முயல்கிறது. கிராமத்து மக்களையும் நகரத்து மக்களையும், ஞானிகளையும் ஒப்பிட்டு பாருங்கள். மூவருக்கும் உள்ள வேற்றுமைகள் புரியும். மக்கள் ஏதோ சாதாரணமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிடவில்லை நம் முன்னோர். அப்படி சாதாரண வாழ்வு வந்தால் மீண்டும் மீண்டும் இங்கு மனிதராய் பிறந்து உழன்று கொண்டே இருப்பார்கள். உச்ச கட்ட அறிவில் வாழ்ந்து மனித வாழ்வு தாண்டி தெய்வத்தன்மை என்ற மேல்நிலை அடையவே இத்தகைய வாழ்வு முறைகள். பகுத்து ஆராய்பவர்கள் மென்மேலும் முன்னே போகட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...