Monday, July 12, 2021

ஆயத்தப் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இதை நடைமுறைபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 கொங்கு நாட்டின் தலைநகரம்:

கோயம்புத்தூர்.
உள்ளடங்கிய மாவட்டங்கள் :
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம்,நீலகிரி திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி.
பரப்பளவு மொத்தம் : 45,493 KM2 (17,565 Square Miles)
மக்கள்தொகை : 2011 இன் அடிப்படையில்
மொத்தம் : 2,07,43,812
அடர்த்தி : 607/km2 (1,570/Sq-Mi)
அலுவல் மொழி : தமிழ்
மற்றவை : கொங்குத் தமிழ்.
நேர வலயம் : (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் : 635-642xxx
வாகனப் பதிவு : TN 24, TN 27, TN 29 to TN 42, TN 43, TN 47, TN 52, TN 54, TN 66,TN 70, TN 77-78, TN 88, TN 86, TN 94, TN 99
பெரிய நகரம் : கோயம்புத்தூர்.
எழுத்தறிவு : 75.55%
பெயர்க்காரணம் :
கொங்கு என்ற சொல்லின் பெயர்க்காரணமாக கீழுள்ள காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன :
கங்கு என்றால் ஓரம், எல்லை, வரம்பு என்று அர்த்தம். கிணற்றின் ஓரத்தையும் வயலின் ஓரத்தையும் கங்கு என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தற்கால காவிரிக்கு தென்கரையில் உள்ள கொங்கு பகுதிகளிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களிலும் வழக்கில் உள்ளது. மேலும், கேழ்வரகின் உமிக்கும் மேல் உள்ள புறத்தோலை கொங்கு, கொங்க(கொங்கை) என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்ட கிராமங்களில் வழக்கில் உள்ளது. சங்ககால தமிழகத்தின் எல்லையில் ஆண்டதால் கங்கன் என்ற பெயர் வந்தது. எல்லையில் ஓடுவதால் கங்கை என்ற பெயர் வந்தது. அதன்படி, முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்கு, என்று இருந்து காலப்போக்கில் கங்கு>கெங்கு>கொங்கு என மருவியது.
கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் இப்பகுதி கொங்கு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், இப்பகுதி கொங்கு எனவும் கூறுவார் உண்டு.
வரலாறு :
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான, இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது. கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது.
உள்ளடக்க நாடுகள் :
கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு.
24 நாடுகள்:
அண்ட நாடு
அரையன் நாடு
ஆறை நாடு
ஆனைமலை நாடு
இராசிபுர நாடு
ஒருவங்க நாடு
காங்கேய நாடு
காஞ்சிக்கோயில் நாடு
காவடிக்கன் நாடு
கிழங்கு நாடு
குறும்பு நாடு
தட்டையன் நாடு
தலையன் நாடு
திருவாவினன்குடி நாடு
தென்கரை நாடு
நல்லுருக்கன் நாடு
பூந்துறை நாடு
பூவாணிய நாடு
பொன்களூர் நாடு
மணல் நாடு
வடகரை நாடு
வாரக்கன் நாடு
வாழவந்தி நாடு
வெங்கால நாடு
இணைநாடுகள் :
இடைப்பிச்சான் நாடு
ஏழூர் நாடு
சேல நாடு
தூசூர் நாடு
பருத்திப்பள்ளி நாடு
விமலை நாடு.
கொங்கு நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் :
வால்பாறை (தனி)
பொள்ளாச்சி
மேட்டுப்பாளையம்
சூலூர்
தொண்டாமுத்தூர்
கவுண்டம்பாளையம்
கோவை வடக்கு
கோவை தெற்கு
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
திருப்பூர் தெற்கு
திருப்பூர் வடக்கு
அவினாசி
பல்லடம்
காங்கேயம்
தாராபுரம்
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம்
அரவக்குறிச்சி
கரூர்
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை
பழநி
ஒட்டன்சத்திரம்
ஆத்தூர்
நிலக்கோட்டை
நத்தம்
திண்டுக்கல்
வேடசந்தூர்
ஊட்டி
கூடலூர்
குன்னூர்
ராசிபுரம்
சேந்தமங்கலம்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
திருச்செங்கோடு
குமாரபாளையம்
ஈரோடு கிழக்கு
ஈரோடு மேற்கு
மொடக்குறிச்சி
பெருந்துறை
அந்தியூர்
கோபிசெட்டிபாளையம்
பவானிசாகர்
ஊத்தங்கரை
பர்கூர்
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி
ஓசூர்
தளி
பாலக்கோடு
பென்னாகரம்
தர்மபுரி
பாப்பிரெட்டிபட்டி
அரூர்
கங்கவள்ளி
ஆத்தூர்
ஏற்காடு
ஓமலூர்
மேட்டூர்
எடப்பாடி
சங்ககிரி
சேலம் மேற்கு
சேலம் வடக்கு
சேலம் தெற்கு &
வீரபாண்டி
என தமிழகத்தின் 67 சட்டமன்ற தொகுதிகளை இந்த கொங்கு மாநிலம் உள்ளடக்கி உள்ளது. நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த கொங்கு மாநிலத்தில் 67 / 44 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று, இந்த கொங்கு மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.
கொங்கு நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள் :
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
நாமக்கல்
ஈரோடு
திருப்பூர்
நீலகிரி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
திண்டுக்கல் &
கரூர்
என பதினோறு மக்களவை தொகுதிகளை இந்த கொங்கு நாடு கொண்டுள்ளது.
கொங்கு நாட்டின் ஆறுகள்:
ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
காஞ்சி (நொய்யல்),
வானி (வவ்வானி, பவானி),
பொன்னி (காவிரி ஆறு),
சண்முகநதி
குடவனாறு (கொடவனாறு),
நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
மீன்கொல்லிநதி
சரபங்காநதி
உப்பாறு
பாலாறு
கௌசிகா நதி.
கொங்கு நாட்டில் உள்ள மாநகராட்சிகள் :
கொங்கு நாட்டில் உள்ள மாநகராட்சிகள் அனைத்துமே தொழில்வளம் நிறைந்தவை. அவற்றுள் மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி ஆகும். இந்த கொங்கு நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் மட்டும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வட மாநிலத்தவர் அதிகளவில் பணி செய்கின்றனர்.
கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சி
ஈரோடு மாநகராட்சி
சேலம் மாநகராட்சி
ஓசூர் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி
என தமிழகத்தின் பதினைந்து மாநகராட்சிகளில் ஆறு மாநகராட்சிகளை இந்த கொங்கு மாநிலம் கொண்டுள்ளது.
கொங்கு நாட்டில் நகரங்களும் அடைப்பெயர்களும் :
கோயம்புத்தூர் - தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
திருப்பூர் - பனியன் நகரம்
ஈரோடு - மஞ்சள் நகரம்
சேலம் - மாம்பழ நகரம்
நாமக்கல் - முட்டை நகரம்
நீலகிரி - மலைகளின் இளவரசி
வால்பாறை - தேயிலை நகரம்
கொடைக்கானல் - மலைகளின் இராணி
திண்டுக்கல் - பூட்டு நகரம்
கரூர் - கைத்தறி நகரம்.
கொங்கு நாட்டில் பொருளாதாரம் :
கொங்கு நாட்டில் பல தொழிற்சாலை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. வேளாண்மை மற்றும் ஜவுளித் தொழில்கள் இப்பகுதியின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிக்கின்றது. இங்கு பருத்தி ஆடைகள், பின்னலாடை, உள்ளாடைகள் மற்றும் பால், கோழி, மஞ்சள், கரும்பு, அரிசி, வெள்ளை பட்டு, தேங்காய், வாழைப்பழங்கள் போன்ற விவசாய பொருட்களும் மற்றும் காகிதம், வாகன உதிரி பாகங்கள், நீர் விசையியக்கக் குழாய்கள், அரவை இயந்திரம், நகைகள், அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய பொருட்கள் தயாரிப்பதில் கொங்கு நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. திருப்பூருடன், கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். கருரில் கைத்தறி துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது தவிர கரூரில் கொசுவலை மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் நாட்டிலேயே அதிகம் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் காய்கறி உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மாவட்டமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், இந்தியாவின் நம்பர் 1 போக்குவரத்து மையமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோழி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மரவல்லிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது.சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம் அதிகளவில் விளைகிறது.
கொங்கு நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் :
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, ஒகேனக்கல், சத்தியமங்கலம், மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகள் சுற்றுலா தளங்களாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை மற்றும் ஆனை மலையில் உள்ள டாப்சிலிப் இரண்டும் வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கும் சுற்றுளா தளங்களாகும்.
கொங்கு நாட்டில் உள்ள கோவில்கள் :
பழனி, பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேசுவரர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில், கொடுமுடி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் மருதமலை ஆகிய கோவில்கள் கொங்கு நாட்டில் உள்ள முக்கிய கோவில்களாகும். சென்னிமலை முருகன் கோவில், சிவன்மலை முருகன் கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சாமி திருக்கோயில், வெள்ளோடு ராசா கோவில், பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர் பட்டி விநாயகர் கோவில், கோவை தண்டு மாரியம்மன் கோவில், கோவை கோனியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் திருக்கோவில் ஆகியவை குறிப்பிடத்தகுந்த கோவில்கள் ஆகும். மற்றும் கரூரில் உள்ள தாந்தோன்றிமலை (தென்திருப்பதி) ஆகும்.
கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசம் :
கொங்கு நாடு எனப்படும் தமிழகத்தின் மேற்கு மண்டலங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலமாக உருவாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது. இதற்கு தற்போது தான் மத்திய அரசு செவி சாய்த்துள்ளது. இந்நிலையில் கொங்கு மண்டலம் எனப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக “யூனியன் பிரதேசமாக” மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இதை நடைமுறைபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நீங்கள் கூட்டி கழித்து பார்த்தால் உங்களுக்கு தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாக புரியவரும். 🔱
May be an image of outdoors and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...