1969 அண்ணா மறைவு,திமுக முதல்முறையாக ஆட்சியில். உடனடியாக கட்சி தலைவா , முதல்வர் அறிவிக்கப்பட வேண்டும்.
MLA க்கள் பெரும்பான்மை நெடுஞ்செழியனுக்கு ஆதரவு.
கட்சியின் வாக்கு வங்கி சூத்திரதாரி MGR.
MGR ம் கருணாநிதியும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஒன்றாக பணியாற்றிய போது நெருங்கிய நட்பில்.
அது கட்சியிலும் தொடர்ந்தது.
காரணம் MGR திரை உலகில் ,கருணாநிதி அரசியலில் எனவே உரசல் இல்லை.
இந்நிலையில் கருணாநிதி MGR தனக்கு ஆதரவு தர வேண்டினார்.
MGR கருணாநிதி முதல்வர் மற்றும் கட்சி தலைவர் என்று ஆதரவு தெரிவிக்க மற்ற MLA களும் MGR சொல்படி.நெடுஞ்செழியன் போட்டியிலிருந்து விலகினார்.
அதற்கு பலனாக MGR திமுக பொருளாளர் ஆக்கப்பட்டார்.
அவர் கட்சிக்குள் சென்றதும் கருணாவின் நடவடிக்கை ஊழல் என்று உரசல் துவங்கியது.
1972 இல் மதுரை ரேசகோர்ஸ் மைதானத்தில் திமுக மாநாடு.
அந்த காலத்தில் MGR வரம் நேரமே கூட்டம் துவங்கும் நேரம்.
அன்றைய கூட்டத்த்துக்கு MGR இரவு 11 மணிக்கு வந்தார்.
எப்போதும் கடைசியாக பேசும் மக்கள் திலகம்(அவர் பேசியதும் கூட்டம் போய் விடும்.அவர் முகத்தை பார்க்கததானே கூட்டம்) அன்று வந்து சில நிமிடத்தில் ஆ.மாதவன் பேசி முடித்ததும் கருணா பேச எழ MGR சட்டென மைக் பிடித்து விட்டார்.
அன்றைய கூட்டத்தில் MGR " என்னை பொருளாளர் என்கிறார்கள் ஆனால் கட்சியின் எந்த வரவு செலவு கணக்குகளை என்னிடம் சொல்வதில்லை ,அனுமதியும் கேட்பதில்லை .
பேருக்கு பொருளாளர் பதவி எதற்கு?
மக்களிடம் வாங்கும் பணத்துக்கு கணக்கு ஏன் கூட்டத்தில் படிக்கவில்லை "என்று காட்டமாக பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி போய் விட்டார்.
கூட்டமும் சட்டென கரைந்து போனது.
கருணாநிதி பேச்சை கேக்க ஆள் இல்லை.(அந்த கூட்டத்துக்கு நான் போயிருந்தேன்.அப்போது மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பில் நான்).
மறுநாள் திமுக தலைமை MGR ஐ கட்சியை விட்டு நீக்கி அறிக்கை.
மதுரையில் அப்போது பாண்டியன் ரோடவேஸ் PRC இரண்டு பஸ்கள் எரிக்கப்பட்டு மாணவர்கள்,பொதுமக்கள் ஸ்ட்ரைக் நடந்தது.
தொடர்ந்து திண்டுக்கல் MP இடைத்தேர்தல் 1972-73 அதிமுகவை தோற்றுவித்த புரட்சி தலைவர் மாயத்தேவர் என்பவரை நிறுத்தி முதல் வெற்றி கனி பறித்தார்.
அடுத்து வந்த சட்டமன்ற தேர்தல் துவங்கி இதயக்கனி, மக்கள் திலகம் மறைவு வரை அதிமுக ஆட்சி தான்.
திமுக கருணாநிதி சென்னை துறைமுகம் என்ற தொகுதியில் வெற்றி பெற்று திமுகவின் ஒற்றை MLA ஆக இருந்த தேர்தலும் உண்டு.
கருணாநிதி ஒரு மகா மோசமான அரசியல்வாதி.
ஆனால் திமுக கட்டமைப்பு மக்களை பிரித்தாளுவதில் வல்லவர்.
தமிழ் ,தமிநாடு,தமிழன் என்று மாநில மக்களை திசை திருப்பி தன் பிடிக்குள் கொண்டு வந்த அண்ணாவின் அடிச்சுவட்டை கெட்டியாக பிடித்து கொண்டவர்.
இன்னும் சொல்ல நிறைய உண்டு....
No comments:
Post a Comment