மிக சரியான முடிவு. ஆனால் காலம் தாழ்த்தி எடுத்த முடிவு. இந்த முடிவை முன்பே எடுத்திருக்க வேண்டும்.
ஊடகங்கள் தொழில் நிமித்தம் ஓரளவு அரசு சார்பு நிலையை எடுப்பது இயல்பான காரியம்தான். ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சி ஊடகங்களையே 'ஓவர்டேக்' செய்யும் அளவிற்கு பர்பாமன்ஸ் செய்வதைதான் பார்க்க சகிக்கலை.
அனைத்து ஊடகங்களிலும் ஊடுருவியுள்ள திமுக ஊடக அணிதான் PK உடன் சேர்ந்து கடந்த தேர்தலில் திமுகவிற்கு உதவியது. தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் வந்த பிறகும் அவர்களால் இயல்பு நிலைக்கு திரும்ப இயலவில்லை.
அதை சுட்டிக்காட்ட, திருத்த அதிமுக எடுத்துள்ள இந்த முடிவை மற்ற எதிர்க்கட்சிகளும் தாமாக முன்வந்து எடுக்க வேண்டும்.


No comments:
Post a Comment