Wednesday, July 7, 2021

'சீனியர்கள்' ராஜினாமா ஏன்?

 அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது. ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால் போன்றோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது தெரிந்தாலும், எத்தனை பேருக்கு, யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது ரகசியமாகவே இருந்தது.ஆனால், யாரும் எதிர்பாராதது, 12 'சீனியர்' அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுதான். குறிப்பாக, சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்தன், செய்தி - ஒலிபரப்பு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் ராஜினாமா செய்தது, சக அமைச்சர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

'சீனியர்கள்' ராஜினாமா ஏன்?

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை சரியாக எதிர்கொள்ளவில்லை என, ஹர்ஷ்வர்தனுக்கு எதிராக கூறப்படுகிறது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் தொடர்பாக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்துடன் மோதல், ரவி சங்கர் பிரசாத் வெளியேற்றத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.
கல்வி அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார். அதனால், உடல்நிலை காரணமாக கூறப்படுகிறது.
கடந்த, இரண்டு மாதங்களாக, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, மோடி ஆய்வு செய்தார். அதில், இந்த குறிப்பிட்ட அமைச்சர்களின் செயல்பாட்டில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என, கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் இதையே கூறியது.

அதோடு, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது, பிரதமர், மோடியின் விருப்பமாக இருந்தது. இதையடுத்து, மோடி இந்த அதிரடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் இருந்தபோது, மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள, இந்த, 12 பேருக்கும், கட்சிப் பணி அல்லது மாநில சட்டசபை தேர்தல் பணிகள் கொடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...