Friday, July 9, 2021

நமக்கு வரும் கஷ்டமே.. நமக்கு அளிக்கப்பட்ட உதவி..!!

 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂


💗சிந்தனை கதை...




அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன். யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன்.

அன்று வீட்டின் முற்றத்தில் மறந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது , ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில் பட்டது . மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.


இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான் . ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான் , வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான் . அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம் , வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக !


நேரம் கடந்த்தது , ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை ! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொற்றியது . வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்த்தது ! அவன் திகைத்து நின்றான்.


கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும். அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு , அதற்கு எமனாகி விட்டது !


நமக்கு வரும் கஷ்டங்கள் , நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி . அதனால் அதை ஏற்றுக் கொண்டு பயிலுவோம் , எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே , அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...